மக்கள் வாழ்க்கையில் கூட்டுறவானது மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்: விக்னேஸ்வரன்
வடமாகாணசபை வரமுன் கூட்டுறவு அபிவிருத்தி அலுவலர்களுக்கு இருந்த மனோநிலை மாற வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு அபிவிருத்தி அலுவலர்களின் பணி மேம்பாட்டு நிகழ்வு இன்று காலை 9.30 மணிக்கு கிறீன் ஃகிறாஸ் ஹொட்டேலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்ட முதலமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
போர்க் காலத்தில் எமது வடமாகாண பொருளாதார, வாழ்வாதார வசதிகள் பலவாறாகப் பாதிக்கப்பட்டன. மக்கள் காயப்பட்டு, மனதாலும் உடலாலும் பாதிப்புக்குள்ளானார்கள்.
பொருட்களை இழந்தார்கள். குடும்பக் கட்டுக் கோப்பு பாரிய பாதிப்புக்குள்ளானது. இந்த நிலையை மாற்றி அமைப்பதும் மக்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதும் உங்கள் ஒவ்வொருவரின் தலையாய கடனாக இருக்க வேண்டும்.
கூட்டுறவானது மக்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த ஒரு உந்துகோலாக அமைய வேண்டும்.
வடமாகாணசபை வரமுன் உங்களுக்கிருந்த மனோநிலை மாற வேண்டும். இப்பொழுது நீங்கள் மக்களுடன் மிக நெருங்கி வந்து விட்டீர்கள். மக்களின் தேவைகள், அவர்களின் ஆசைகள், அபிலாஷைகள் அனைத்தையும் அருகில் இருந்து அவதானிக்க வேண்டியவர்களாகி உள்ளீர்கள்.
அவதானித்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய என்ன செய்யலாம் என்ற கருத்தை நீங்கள் மக்கட் சேவையாற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு எடுத்தியம்ப வேண்டிய ஒரு முக்கியமான பதவியில் இருக்கின்றீர்கள்.
அதனைச் செவ்வனே செய்ய நீங்கள் முன்வரவேண்டும்.
அதே நேரத்தில் அரசாங்கத்திற்கும் அதாவது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் கூட்டுறவுச் சங்கங்களுக்குமிடையில் ஒரு பாலமாக நீங்கள் இருந்து கடமையாற்றுகின்றீர்கள் என்பதை மறக்கக்கூடாது.
மக்கள் வாழ்க்கையில் கூட்டுறவானது மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்: விக்னேஸ்வரன்
Reviewed by NEWMANNAR
on
August 02, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 02, 2014
Rating:


No comments:
Post a Comment