மிதக்கும் கடைத் தொகுதிகள் இன்று திறந்துவைப்பு
புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையில் அமைந்துள்ள மிதக்கும் கடைத் தொகுதிகள் இன்று திறக்கப்படவுள்ளதாக அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மிதக்கும் கடைத் தொகுதிகள் இன்று பிற்பகல் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக அமைச்சின் ஊடக நிலையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையிலுள்ள பேர வாவியில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் கடைத்தொகுதியில் 90 கடைகள் உள்ளதாக பிரிகேடியர் ருவன் வணிகசூரிய குறிப்பிட்டார்.
“அழகிய நாடு, அழகிய நகர திட்டத்தின் கீழ் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய, நகர அபிவிருத்தி அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் ஒரு கட்டமாக இந்த மிதக்கும் கடைத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மிதக்கும் கடைத் தொகுதிகள் இன்று திறந்துவைப்பு
Reviewed by NEWMANNAR
on
August 25, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 25, 2014
Rating:


No comments:
Post a Comment