வீதி விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களின் நினைவாக நெடுங்கேணி கற்குளம் கிராமத்தில் அமைக்கப்பட்ட பயணிகள் தரிப்பிடம் திறந்து வைப்பு.
நெடுங்கேணி கற்குளம் கிராமத்தில் அமைக்கப்பட்ட பயணிகள் தரிப்பிடத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் நேற்று சனிக்கிழமை(23) திறந்து வைத்தார்.
அண்மையில் இடம் பெற்ற வீதி விபத்து ஒன்றின் போது நெடுங்கேணி கற்குளம் கிராமத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் குறித்த இளைஞர்களின் நினைவாக அந்த இளைஞர்களின் குடும்ப உறவுகளினால் அமைக்கப்பட்ட குறித்த பயணிகள் தரிப்பிடமே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.செந்தூரன்,பூபாலசிங்கம், மகாலிங்கம் மற்றும் நூற்றுக்கணக்கான கிராமக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வீதி விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களின் நினைவாக நெடுங்கேணி கற்குளம் கிராமத்தில் அமைக்கப்பட்ட பயணிகள் தரிப்பிடம் திறந்து வைப்பு.
Reviewed by NEWMANNAR
on
August 25, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment