அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் 2 ஆவது நாளாக இன்று இடம் பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள்.

மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நான் விசாரணைகள் இன்று சனிக்கிழமை(9) மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது. நேற்று வெள்ளிக்கிழமை(08) முதல் மன்னார் மாவட்டத்தில் நடைபெற்று வரும் இவ் விசாரணைகள் எதிர்வரும் திங்கட்கிழமை(11) வரை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ன. 

 மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேச செயலக பிரிவுகளில் 3 பிரதேச செயலக பிரிவுகளில் மட்டுமே இவ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாந்தை மேற்கு,மன்னார்,மடு ஆகிய பிரதேசங்களில் உள்ள 45 கிராம அலுவலகர்கள் பிரிவுகளில் உள்ள 230 பேர் இவ் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டிருந்தனர். காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜானதிபதியின் ஆணைக்குழுவிற்கு மெக்ஸ் வெல் பராக்கிரம பரனகம தலைமையில் மனோ ராமநாதன்,எஸ்.வித்தியாரத்தின ஆகியோர் முன்னிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இதில் மாந்தை மேற்கு பிரிவில் முதல் நாள் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற விசாரணைகளின் போது 65 பேரும் 2 ஆம் நாள் இன்று சனிக்கிழமை 60 பேரும் 3 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மன்னார் பிரதேச செயலக பிரிவில் 60 பேரும்,4 ஆம் நாள் திங்கட்கிழமை மடு பிரதேச செயலக பிரிவில் 45 பேரும் மொத்தம் 230 பேர் இவ் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர். இவ் விசாரணைகள் முதல் மூன்று தினங்களும் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணி வரைக்கும்,இறுதி நாள் காலை 9 மணி தொடக்கம் 1 மணிவரையும் இவ் ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

 ஆனால் முதல் நாள் நேற்று வெள்ளிக்கிழமை மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள கட்டத்தில் நடைபெற்ற விசாரணைகளின் போது விசாரணைக்காக 65 பேர் அழைக்கப்பட்டிருந்த போதும் 47 பேர் மாத்திரமே ஆணைக்கு முன் வருகை தந்து காலை 9 மணி தொடக்கம் மாலை 5.50 மணிவரை சாட்சியமளித்தனர்.

 அத்துடன் 25 பேர் நேற்று(8) விசாரணைக்காக தங்கள் விண்ணப்பத்தை புதிதாக பதிவு செய்திருந்தனர். அத்துடன் இரண்டாவது நாள் அமர்வு இன்று சனிக்கிழமை காலை குறிப்பிட்ட நேரத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் ஆரம்பமாகியது. இவ் விசாரணைக்காக 4 கிராம அலுவலகர் பிரிவுகளைச் சேர்ந்த 60 பேர் விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது. நடை பெற்றுக்கொண்டிருக்கும் விசாரணைகளில் அதிகளவில் விடுதலைப்புலிகளினால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் தொடர்பாகவும் பின் யுத்தம் முடிவு காலத்தில் இவர்களில் பலர் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் வந்த போது காணாமல் போனது தொடர்பாகவும் அதிகமான முறைப்பாடுகள் செய்யப்பட்டமையினை காணக்கூடியதாக உள்ளது. 

 அத்துடன் நாளை ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் நடை பெறும் இவ் ஆணைக்குழு விசாரணையின் முன்னிலையில் முக்கியமாணவர்கள் சாட்சியமளிப்பார்கள் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது.



















மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் 2 ஆவது நாளாக இன்று இடம் பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள். Reviewed by NEWMANNAR on August 09, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.