அண்மைய செய்திகள்

recent
-

பிறந்த நாளில் நான்கு கிலோ தங்க சட்டை அணிந்த கோடீஸ்வரர்

மும்பையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர் பங்கஜ் பராக். இவர் தனது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் நான்கு கிலோ எடை கொண்ட தங்க சட்டை அணிந்து மகிழ்ந்தார். 7 தங்க பட்டன்கள் கொண்ட இந்த சட்டையை பரேலில் உள்ள சாந்தி ஜுவல்லர்ஸ் என்ற நிறுவனத்தின் 20 பேர் கொண்ட நகை வடிவமைப்பாளர்கள் குழு, இரண்டு மாதங்களில் 3200 மணி நேரங்கள் செலவழித்து இந்த சட்டையை தைத்துள்ளது. 

இந்த சட்டையில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள தங்கத்தின் தரம் 18 முதல் 22 கேரட் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கத்தில் செய்யப்பட்டிருந்தாலும் இது மடிக்ககூடியதாகவும், அணிந்து கொள்ள ஏதுவாகவும் உள்ளதுடன் உள்புறம் உடலை கிழிக்காமல் இருப்பதற்காக மெல்லிய துணி வைத்து தைக்கப்பட்டிருக்கிறது. 

 இந்த ஆடையை அணிந்து கின்னஸ் மற்றும் லிம்கா சாதனைகளில் இடம் பெறுவேன் என்று பங்கஜ் பராக் தெரிவித்தார். மேலும் சிறுவயதில் இருந்தே தங்க நகைகள் அணிவதில் தனக்கு பேரார்வம் இருந்ததாக அவர் தெரிவித்தார். தனது திருமணத்தின் போது மணப்பெண் அணிந்திருந்த நகைகளை விட தான் அதிகமாக அணிந்திருந்ததாகவும் பங்கஜ் மகிழ்ச்சியுடன் கூறினார்.
பிறந்த நாளில் நான்கு கிலோ தங்க சட்டை அணிந்த கோடீஸ்வரர் Reviewed by NEWMANNAR on August 09, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.