செவ்வாழையின் பலன்கள்
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் பல்வேறு உயிர் சத்துக்களையும், கனிமங்களையும் கொண்டுள்ளது. இதில் சுண்ணாம்புச்சத்து அதிகளவு உள்ளது. மேலும் “ப்ரக்டோஸ், குளுக்கோஸ், சுக்ரோஸ்‘ ஆகிய மூன்று வித சர்க்கரைகள் உள்ளன. ஒரே உணவில் இவை கிடைப்பது மிக அபூர்வமானது. உடலுக்கு அவசிய தேவையான நார்ச்சத்து, புரதச்சத்து போன்ற முக்கியமான சத்துக்களையும் வாழைப்பழம் தன்னுள் கொண்டுள்ளது.
வாழைப்பழம் உணவை எளிதில் ஜீரணமாக்கும் ஆற்றல் உள்ளது. பித்தத்தை நீக்கும். உடலுக்கு வலுவும், எடையை அதிகரிக்கும் ஆற்றலும் கொண்டது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மலச்சிக்கலை போக்கும். குடலில் புண்ணையும் ஆற்றும்.
கடும் பணியின் காரணமாக ஏற்படும் சோர்வை நீக்கும் ஆற்றல் கொண்டது வாழைப்பழம். சோர்வாக இருக்கும்போது ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டால் சுறுசுறுப்பு தானாக வந்துவிடும். அதன்பின், மீண்டும் சில மணி நேரம் வேலை செய்யலாம்.
வாழைப்பழத்தில் உள்ள, “ட்ரைப்டோபன், செரடோனின்" ஆகிய இரசாயன சத்துக்கள்தான் இதற்கு காரணம். பக்கவாதம் வராமல் தடுக்க வாழைப்பழம் பெரிதும் உதவுகிறது. வாழைப்பழத்தில் சர்க்கரை அளவு குறைவு பொட்டாசியம் சத்து அதிகம். அதனால், இரத்த அழுத்தத்தை முற்றிலும் தடுத்து விடும்.
வாழைப்பழத்தில், ‘விட்டமின் பி 6’ உள்ளது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்குவது இதுதான். வாழைப்பழத்தில், “ஆன்டாசிட் என்னும் இரசாயனமும் உள்ளதால், உணவு சாப்பிட்ட பின் சிலருக்கு ஏற்படும் நெஞ்செரிச்சலை சுலபமாக போக்கி விடுகிறது.
வாழைப்பழத்தில், இரும்புச்சத்து உள்ளது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்து இல்லாததால்தான் இரத்த சோகை ஏற்படுகிறது. இரத்தச்சோகை உள்ளவர்கள், வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தச்சோகை விலகும்.
ஆண்மை குறையை நீக்கும், கண் பார்வையால் பாதிக்கப்ப ட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணியாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன் தினசரி ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு உணவுக்கு பிறகு 40 நாட்கள் தொடர்ந்து செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால் இதற்கு பலன் கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை பழத்தை சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும். ஆண்மை தன்மை சீரடையும்.
செவ்வாழையின் பலன்கள்
Reviewed by NEWMANNAR
on
August 02, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 02, 2014
Rating:


No comments:
Post a Comment