ரொட்டியில் இருந்த கத்தி: அதிர்ச்சியில் உறைந்த தாய்
பிரித்தானியாவில் தாயார் ஒருவர் தனது மகனுடன் சேர்ந்து உணவகத்தில் வாங்கிய ரொட்டியில் பெரிய கத்தி ஒன்று இருந்தது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானியாவின் பிர்பிங்கம் நகரை சேர்ந்த கெலே வாக்கர் மற்றும் அவரது மகன் டேன் உணவகம் ஒன்றில் ரொட்டி வாங்கியுள்ளனர்.
பின்னர் ரொட்டியை எடுத்து சாப்பிட்ட போது, அதில் 20செ.மீ அளவு கத்தி ஒன்று இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த தாய், தன் மகனுடன் சென்று உணவகத்தில் புகார் செய்துள்ளார். இதனையடுத்து உணவகத்தின் மேலாளர் இவர்களிடன் மன்னிப்பு கேட்டதுடன் அடுத்த முறை ஆர்டர் செய்யப்படும் உணவை இலவசமாக தரவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இது குறித்து கேலே கூறுகையில், தனது மகன் ரோட்டியை எடுத்திருந்தால் விபரிதம் ஏற்பட்டிருக்கும். இது தான் முதல் முறையும், கடைசி முறையும் இந்த உணவகத்தில் சாப்பிடுவது என்று கூறியுள்ளார்.
ரொட்டியில் இருந்த கத்தி: அதிர்ச்சியில் உறைந்த தாய்
Reviewed by NEWMANNAR
on
August 11, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 11, 2014
Rating:


No comments:
Post a Comment