அண்மைய செய்திகள்

recent
-

யால தேசிய விலங்குகள் சரணாலயம் மூடப்படுகிறது

யால தேசிய விலங்குகள் சரணாலயம் நாளை எதிர்வரும் 30ஆம் திகதிவரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக வனவிலங்குகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

 வரட்சி காரணமாக ஓகஸ்ட் – செப்டெம்பர் மாதங்களில் யால விலங்குகள் சரணாலயம் மூடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இக்காலப்பகுதியில் உள்ளக அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதோடு, விலங்குகள் வேறு பிரதேசங்களுக்குச் செல்வதை தடுப்பதற்காக மின்வேலிகளும் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 ஒக்டோபர் முதலாம் திகதி மீண்டும் விலங்குகள் சரணாலயத்தை திறப்பதற்கு தீர்மானித்துள்ள போதிலும் வரட்சி நீடிக்கும் பட்சத்தில் சரணாலயம் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என, வனவிலங்குகள் திணைக்களம் அறிவித்துள்ளதான அரசாங்க செய்தி இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யால தேசிய விலங்குகள் சரணாலயம் மூடப்படுகிறது Reviewed by NEWMANNAR on September 01, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.