ஏ-9 வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்
வவுனியா தேக்கவத்தை பகுதியில் ஏ 9 வீதியை மறித்து நேற்றிரவு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் அந்த வீதியூடான வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டிருந்தது.
தேக்கவத்தை பகுதியில் உள்ள பொதுக் கிணறு ஒன்றில் இருந்து நீரை பெற்றுக்கொள்வது தொடர்பில் எழுந்த பிரச்சினை ஒன்றை அடிப்படையாக கொண்டே மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றிரவு எட்டு மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால் ஏ-9 வீதியூடான வாகன போக்குவரத்திற்கு சில மணித்தியாலங்கள் இடையூறு ஏற்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஏ-9 வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்
Reviewed by NEWMANNAR
on
September 01, 2014
Rating:

No comments:
Post a Comment