ஐஸ்லாந்தில் வெடித்து சிதறும் எரிமலை
ஐஸ்லாந்து நாட்டில் பர்டார்பங்கா எரிமலை பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து எரிமலை குழம்பு சிதறல் ஏற்பட்டுள்ளமையால் விமான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் எரிமலையினால் இதுவரை ஏற்பட்ட புகையால் விமான போக்குவரத்தில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
 மத்திய ஐஸ்லாந்து பகுதியில் பதிவாகியுள்ள பெரிய நிலநடுக்கம் இதுவென கூறப்படுகிறது.
கடந்த ஓகஸ்டு 16ந் திகதியில் இருந்து இப்பகுதியில் நிலநடுக்கத்தின் தீவிரம் அதிகரித்து காணப்படுகிறது.
சில சமயங்களில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் நிலநடுக்கங்கள் கூட ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
 பனி சூழ்ந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு எரிமலை குழம்பு வெடித்ததை தொடர்ந்து ஏற்பட்ட சாம்பல், புகை மண்டலமாக பரவுவதற்கு முன்பாக கட்டுப்படுத்தப்பட்டது.
இதற்கு முன்பு ஐஸ்லாந்தின் பல்வேறு பகுதியில் ஏற்பட்டுள்ள எரிமலை வெடிப்பால் பரவிய சாம்பல் ஐரோப்பாவின் வான்வெளி பரவியதால், விமான போக்குவரத்துகள் பெரிதும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஐஸ்லாந்தில் வெடித்து சிதறும் எரிமலை
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
September 08, 2014
 
        Rating: 
      
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
September 08, 2014
 
        Rating: 
.jpg)

No comments:
Post a Comment