குழந்தைகளை குஷிப்படுத்தும் “குட்டி சிக்குபுக்கு”
சிறுவயதில் ரயிலில் செல்வது என்றாலே அலாதி பிரியம் தான், அதிலும் பூங்காக்களில் குட்டி ரயில்களில் சுற்றுவது குழந்தைகளுக்கு குதூகலமாக இருக்கும்.
இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால், இங்கிலாந்தில் உலகின் சின்ன ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இங்கிலாந்தின் கென்ட் மாநிலத்தில் ரோம்னி- ஹைத் டைம்சர்ச் என்ற பெயரில் ரயில்வே நிர்வாகம் உள்ளது.
இந்த நிர்வாகம் தான் சின்ன ரயிலை அறிமுகப்படுத்தியது, 1927ம் ஆண்டு முதல் 1978ம் ஆண்டு வரை இது ஓடியது.
அங்குள்ள ஹைத் சின்க்யூ துறைமுகத்தில் தொடங்கி டைம்சர்ச், செயின்ட் மேரிஸ் கடற்கரை, நியூ ரோம்னி வழியாக டங்ஜென்னஸ் கலங்கரை விளக்கம் வரை 21.7 கிலோ மீட்டர் தூரம் ஓடியது.
இதையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு பிரான்சில் பத்தே கால் (260 மில்லி மீட்டர்) இடைவெளி கொண்ட தண்டவாளத்தில் ரிசியூகுர்லிடான் ரயில் 1978ம் ஆண்டு அறிமுகமானது.
ஆனால், இது 1979-ம் ஆண்டு வரை மட்டுமே ஓடியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது சுற்றுலாவை வளர்க்கவும், குழந்தைகளை குஷிப்படுத்தவும் குட்டி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
குழந்தைகளை குஷிப்படுத்தும் “குட்டி சிக்குபுக்கு”
Reviewed by NEWMANNAR
on
September 08, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 08, 2014
Rating:


No comments:
Post a Comment