கண்ணிவெடிகளை அகற்ற பிரிட்டன் நிதியுதவி
இலங்கையில் கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கைகளுக்காக கடந்த 5 வருடங்களில் பிரிட்டன் மொத்தமாக 5.1 மில்லியன் யூரோவை வழங்கியுள்ளதாக, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுலாக்கத்திற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டம் அறிவித்துள்ளது.
நாட்டின் போரால் பாதிக்கப்பட்ட இடங்களில் காணப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக த ஹலோ ட்ரஸ்ட் அமைப்பிற்கு, 2010ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் வரை பிரிட்டன் இந்த நிதியை வழங்கியுள்ளது.
மேலும், 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து மேலும் 18 மாத காலப்பகுதிக்காக 1.6 மில்லியன் யூரோவை கடந்த ஆண்டில் பிரிட்டன் அறிவித்திருந்தது.
அண்மையில் வடக்கிற்கு சென்றிருந்த இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் றாங்கின், இலங்கையின் கண்ணிவெடியகற்றல் நடவடிக்கைகளின் நீண்டகால ஆதரவாளராக ஐக்கிய இராச்சியம் இருந்து வந்திருக்கிறது எனத் தெரிவித்தார்.
போரின் ஆபத்தான எச்சங்களை அகற்றும் ஐக்கிய இராச்சியத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்பான த ஹலோ ட்ரஸ்ட், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றது.
கண்ணிவெடி ஆபத்து விழிப்புணர்வு மற்றும் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களையும் இந்த அமைப்பு நடாத்தி வருவதாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுலாக்கத்திற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டம் குறிப்பிட்டுள்ளது.
கண்ணிவெடிகளை அகற்ற பிரிட்டன் நிதியுதவி
Reviewed by NEWMANNAR
on
September 13, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 13, 2014
Rating:
.jpg)

No comments:
Post a Comment