அண்மைய செய்திகள்

recent
-

கெக்கிராவை வாகன விபத்தில் நால்வர் பலி

கெக்கிராவ நகரில், கெக்கிராவ – அநுராதபுர பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். தம்புள்ளையிலிருந்து அநுராதபுரம் நோக்கி சென்ற முச்சக்கரவண்டியொன்று எதிர்திசையிலிருந்து வந்த கெப் வாகனத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலம் தெரிவித்துள்ளது. 

 இன்று அதிகாலை 1.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான முச்சக்கர வண்டி சாரதி உள்ளிட்ட இரண்டு ஆண்களும் பெண்கள் இருவரும் கெக்குராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடவலங்ள் கெக்கிராவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன. 

 விபத்துடன் தொடர்புடைய கெப் வாகனத்தின் சாரதி பிரதேசத்திலிருந்து தபலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பொலிஸார் விசாரணைகைள ஆரம்பித்துள்ளனர். கெக்கிராவை, நால்வர், பலி, வாகன, விபத்தில்
கெக்கிராவை வாகன விபத்தில் நால்வர் பலி Reviewed by NEWMANNAR on September 07, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.