5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இந்தமாத இறுதியில் வெளியிடப்பட உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்றது.
பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
மூன்று லட்சம் மாணவ மாணவியர் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
இந்த மாத இறுதியளவில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டில் சர்வதேச சிறுவர் தினமன்று பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டது.
இவ்வாறு பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டமைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்
Reviewed by NEWMANNAR
on
September 08, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 08, 2014
Rating:


No comments:
Post a Comment