'வவுனியா பொடியன்' கைது
கடந்த சில மாதங்களாக 'வவுனியா பொடியன் என்ற பெயரில் முகப்புத்தக (பேஸ்புக்) கணக்கொன்றை இயக்கிவந்ததாகக் கூறப்படும் 16 வயதுச் சிறுவன் ஒருவனை வவுனியா, தோணிக்கல்லில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) இரவு கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சிறுவன் 'வவுனியா பொடியன்' என்ற பெயரில் வவுனியாவைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள், சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள், சமூகத்தில் அறியப்பட்ட பலரையும் அவர்களின் புகைப்படங்களுடன் பிரசுரித்து கீழ்த்தரமான வார்த்தைகளை பிரயோகப்படுத்தி விமர்சித்து வந்திருந்ததாக தெரியவருகின்றது.
இது தொடர்பில் பொதுமக்கள் தகவல் வழங்கினர். இதனைத் தொடர்ந்து, மேற்படி கிராம அலுவலகர் மூலமாக வவுனியா பொலிஸாரிடம் இந்தச் சிறுவன் ஒப்படைக்கப்பட்டான். இந்த நிலையில், இந்தச் சிறுவனை கைதுசெய்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
'வவுனியா பொடியன்' கைது
Reviewed by NEWMANNAR
on
September 01, 2014
Rating:

No comments:
Post a Comment