அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை யுவதி மீது டுபாயில் பாலியல் துஷ்பிரயோகம்

சுற்றுலா வீசாவில் சென்று டுபாயில் தங்கியிருந்த இலங்கை பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குருநாகல் பகுதியைச் சேர்ந்த 18 வயதான யுவதியே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய குறிப்பிட்டார். 

 டுபாய்க்கு அழைத்த நபரினால் இந்தப் பெண் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட யுவதி நேற்று நாட்டிற்கு அழைத்துவரப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டது. இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மங்கள ரன்தெனிய கூறினார்.

 வெளிநாடுகளுக்கு தொழில்நிமிர்த்தம் செல்லும்போது, அவதானத்துடன் செயற்படுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்ற போதிலும், அதனை கருத்திற்கொள்ளாது சிலர் செயற்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இலங்கை யுவதி மீது டுபாயில் பாலியல் துஷ்பிரயோகம் Reviewed by NEWMANNAR on September 25, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.