அண்மைய செய்திகள்

recent
-

எரிபொருட்களின் விலைக்குறைப்பு மீனவர்களுக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது-என்.எம்.ஆலம்.

எரிபொருட்களின் விலை நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ள நிலையில் மன்னாரில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களிலும் உடனடியாக எரிபொருட்கள் விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைவாக மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிபொருள் விற்பனை நிலையங்களிலும் பெற்றோல் 5 ரூபாவினாலும்,மண்ணெண்ணெய் 20 ரூபாவினாலும்,டீசல் 3 ரூபாவினாலும் விலைக்குறைப்பு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிபொருள் விற்பனை நிலையங்களிலும் உடனடியாக குறித்த விலைக்குறைப்பு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மண்ணெண்ணெய் 20 ரூபாவினால் விலை குறைப்புச் செய்யப்பட்டுள்ளமை மீனவர்களுக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்க சமாசத்தின் தலைவரும்,வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவருமான என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,

அரசாங்கமானது இன்றைய நிலையில் எரிபொருட்களின் விலையை சற்று குறைத்துள்ளது. மண்ணெண்ணெய் 20 ரூபாவினால் விலை குறைப்புச் செய்யப்பட்டுள்ளது.அதே வேளை பெற்றோல் 5 ரூபாவினாலும்,டீசல் 3 ரூபாவினாலும் விலைக்குறைப்புச் செய்யப்பட்டுள்ளது.

குறித்த விலைக்குறைப்பு தற்போது மன்னார்  மாவட்டத்திலும் நடை முறைக்கு வந்துள்ளது.

ஆனால் விலையேற்றம் என்பது கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட போது மன்னார் மாவட்ட மீனவச் சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குறித்த பிரச்சினைகளின் ஊடாக பல உயிர்களும் காவுகொள்ளப்பட்டது.

இந்த எரிபொருள் விலையினை குறைப்பதற்காக நாங்கள் மீனவ சமூகத்துடன் இணைந்து பலவேறு போராட்டங்களை மேற்கொண்டிருந்தோம்.
இறுதிவரை போராடினோம் இந்த விலைக்குறைப்பை மேற்கொள்ளுமாறு கோரி.ஆனால் தற்போது திடீர் என இந்த அரசாங்கம் எரிபொருளுக்கான விலைக்குறைப்பை மேற்கொண்டுள்ளது.

அதிலும் மண்ணெண்ணெய் ஒரு லீற்றருக்கு 20 ரூபாவினால் விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளமை மீனவர்களின் வாழ்வாதாரத்தில் சற்று உயர்வை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விலைக்குறைப்பு தொடர்ச்சியாக அமுலில் இருக்க வேண்டும்.

குறித்த விலைக்குறைப்பினூடாக மீனவர்களும் ஏனைய எரிபொருள் பாவனையாளர்களும் நன்மையடைவார்கள் என்பது உண்மை.

குறித்த எரிபொருள் விலையேற்றத்தினாலேயே அரசாங்கத்திற்கும்,மக்களுக்கும குறிப்பாக மீனவர்களுக்கும் இடையில்  நீண்டதொரு இடைவெளியை ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
எரிபொருட்களின் விலைக்குறைப்பு மீனவர்களுக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது-என்.எம்.ஆலம். Reviewed by NEWMANNAR on September 17, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.