திஸா வாவியில் காணாமற்போன சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் சடலங்களாக மீட்பு
அநுராதபுரம் திஸா வாவியில் படகு கவிழ்ந்ததில் காணாமற்போன சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
காணாமற்போனவர்களின் சடலங்கள் இன்று அதிகாலை பொலிஸ் உயிர்ப் பாதுகாப்பு பிரிவினரால் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ஐவர் நேற்று மாலை திஸா வாவிக்கு சென்றிருந்தபோது, அவர்களில் மூவர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இருவர் காணாமற்போயிருந்தனர்.
அனர்த்தத்திற்குள்ளான ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திஸா வாவியில் காணாமற்போன சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் சடலங்களாக மீட்பு
Reviewed by NEWMANNAR
on
September 16, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 16, 2014
Rating:


No comments:
Post a Comment