தீயில் எரிந்த இளம் குடும்பப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
தீயில் எரிந்த நிலையில் யாழ். போதனாவைத்தியசாலையில் கடந்த 7ஆம் திகதியிலிருந்து சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்பப்பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
யாழ். கொழும்புத்துறையைச் சேர்ந்த யுவசீலன் அமிர்தா (வயது 27) என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த இளம் குடும்பப் பெண்ணுக்கும் அயல் வீட்டுப் பெண்ணுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த முரண்பாட்டினால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பொழுது இப்பெண்ணை அயல்வீட்டுப்பெண் விரும்பத்தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மனவிரக்தியுற்ற குறித்த பெண் தனது கணவர் வேலைமுடிந்து வீட்டிற்குச் சென்ற பொழுது அயல் வீட்டுப் பெண்ணை விசாரித்துக் கண்டிக்குமாறு கோரியுள்ளார்.
அனால் கணவன் இரவில் இவ்வாறு செய்யமுடியாது எனவும் விடிந்ததும் தான் விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இப்பெண் கணவரை அச்சுறுத்துவதற்காக தனக்குத்தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீமூட்டப்போவதாக எச்சரித்துள்ளார்.
இதன்பொழுது குறித்த பெண்ணால் உரசப்பட்ட தீக்குச்சி தவறுதலாக பற்றியதில் இப்பெண் தீயில் எரிந்துள்ளார்.
இந்த நிலையில் இப்பெண் கடந்த 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுள்ளார்.
ஆனால் சிகிச்சை பலலின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக யாழ். போதனாவைத்தியசாலையின் பதில் மரணவிசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
தீயில் எரிந்த இளம் குடும்பப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Reviewed by NEWMANNAR
on
September 14, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 14, 2014
Rating:


No comments:
Post a Comment