பாலியாறு கிராமத்தில் அரைக்கும் ஆலை அமைக்க அடிக்கல் நாட்டுவிழா
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குற்பட்ட பாலியாறு கிராமத்தின் அபிவிருத்தியை கருத்தில் கொண்டு வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா. டெனிஸ்வரன் அவர்களினால் பாலியாறு கிராமத்தின் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக கிராம அபிவிருத்தி அமைச்சின் நிதி அனுசரனையில் அரைக்கும் ஆலை அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்றது.
பாலியாறு கிராமமானது விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட கிராமம் என்பதால் இவ் ஆலை மூலம் தாங்கள் சிறந்த பயனை பெற முடியும் என மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு நிகழ்விற்கு வட மாகாண அமைச்சர் பா. டெனிஸ்வரன் ,மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் எஸ். வரப்பிரகாசம் , அமைச்சின் செயலாளர் எஸ். வரதீஸ்வரன்,கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் பெலிசியன மற்றும் அப்பிரதேசத்தின் கிராம சேவையாளர் பாடசாலை அதிபர் கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பாலியாறு கிராமத்தில் அரைக்கும் ஆலை அமைக்க அடிக்கல் நாட்டுவிழா
Reviewed by NEWMANNAR
on
September 19, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 19, 2014
Rating:





No comments:
Post a Comment