அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் 10 ஓவர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி மன்னாரில் ஆரம்பம்-Photo

மன்னார் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்ட கிரிக்கெட் விளையாட்டுக்கழங்களுக்கிடையில் 10 ஓவர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியது. 

குறித்த போட்டியினை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். 9 அணிகள் கலந்து கொள்ளும் இச்சுற்றுப்போட்டி 3 பிரிவுகளாக இடம் பெறவுள்ளது.முதல் சுற்று லீக் முறையிலும்,அதிலிருந்து 06 அணிகள் தெரிவு செய்யப்பட்டு நொக்கோட் முறையில் போட்டிகள் இடம் பெறும். 

 இந்த நிலையில் முதல் போட்டி ஸ்ரார் ஈகிழ் விளையாட்டுக்கழகத்திற்கும்,மன்னார் சித்திவிநாயகர் விளையாட்டுக்கழகத்திற்கும் இடையில் இடம் பெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சித்திவிநாயகர் விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தனர். இதன் போது சித்திவிநாயகர் விளையாட்டுக்கழகம் 10 ஓவர்கள் முடிவில் அணைத்து விக்கட்டுக்களையும் இழந்து 100 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். 

 எதிர்த்து துடுப்பாடிய ஸ்ரார் ஈகிழ் விளையாட்டுக்கழகம் 6.1 ஓவர்களில் விக்கட்டுக்கள் எவையும் இழக்காத நிலையில் 101 ஓட்டங்களைப்பெற்று வெற்றிபெற்றனர். இப்போட்டி தொடர்ந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இடம் பெறவுள்ளது.இன்றைய சுற்றில் மாவட்ட விளையாட்டு அதிகாரி எம்.பருசூக் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






















மன்னார் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் 10 ஓவர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி மன்னாரில் ஆரம்பம்-Photo Reviewed by NEWMANNAR on September 19, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.