ஸ்ரீ ஐயப்பனார் கோயில் உடைக்கப்பட்டு கொள்ளை
மட்டக்களப்பு கிரான்குளம் ஸ்ரீ ஐயப்பனார் கோயில் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை கோயிலை திறப்பதற்கு சென்றபோது இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பல இலட்சம் ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு, குத்துவிளக்குகள் மற்றும் பாரிய குத்து விளக்குகளின் மேல் பகுதிகள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக கோயில் நிருவாகத்தினர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகபர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள கிரான்குளம் ஸ்ரீ ஐயப்பனார் கோயிலில் ஐந்து மாதங்களுக்கு முன்னரும் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
ஸ்ரீ ஐயப்பனார் கோயில் உடைக்கப்பட்டு கொள்ளை
Reviewed by NEWMANNAR
on
September 14, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 14, 2014
Rating:


No comments:
Post a Comment