'டெங்கு இல்லாத இலங்கை'' சித்திரப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைப்பு.-Photo
தேசிய ரீதியாக நடைபெற்ற 'டெங்கு இல்லாத இலங்கை' எனும் தலைப்பில் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நேற்று புதன் கிழமை(17) முசலி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஒஸ்மன் சாள்ஸ் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது பிரதேச மட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் மற்றும் 5 ஆறுதல் பரிசுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதோடு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதேசச் செயலாளர்,வைத்திய அதிகாரிகள்,சுகாதார அதிகாரிகள்,பாடசாலை அதிபர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
'டெங்கு இல்லாத இலங்கை'' சித்திரப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைப்பு.-Photo
Reviewed by NEWMANNAR
on
September 18, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 18, 2014
Rating:





No comments:
Post a Comment