மன்னார் நீதிமன்றம் உத்தரவிடாத நிலையில் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்ட உரிமை கோரப்படாத சடலத்தை தோண்டி எடுத்து உடற்கூற்று பரிசோதனையை மேற்கொள்ள உத்தரவு.
மன்னார் நீதிமன்றம் உத்தரவிடாத நிலையில் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்ட உரிமை கோரப்படாத சடலத்தை எதிர்வரும் 4 ஆம் திகதி நீதிவான் மற்றும் வைத்திய அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுத்து உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,,,,
மன்னார் வங்காலை கடற்கரையோரப் பகுதியில் இருந்து கடந்த 3 ஆம் திகதி புதன் கிழமை அடையாளம் காண முடியாதவகையில் சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டது.
குறித்த சடலத்தை பார்வையிட்ட மன்னார் திடீர் மரண விசாரணை அதிகாரி ரி.பி.சிந்தாத்துரை குறித்த சடலத்தை அடையாளம் காண்பதற்காக மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் குறித்த சடலம் அடையாளம் காண்பதற்காக மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மன்னார் சௌத்பார் கடற்கரை பகுதியில் கடந்த 15 ஆம் திகதி திங்கட்கிழமை உருக்குலைந்த நிலையில் இரண்டாவது சடலம் மீட்கப்பட்டது.
குறித்த சடலத்தை பார்வையிட்ட மன்னார் திடீர் மரண விசாரனை அதிகாரி ரி.பி.சிந்தாத்துரை குறித்த சடலத்தையும் அடையாளம் காண்பதற்காக மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த இரண்டாவது சடலமும் மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த 3 ஆம் திகதி வங்காலை கடற்கரை பகுதியில் முதலாவதாக மீட்கப்பட்ட சடலம் நீண்ட நாட்களாக அடையாளம் காணப்படாத நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உற்படுத்திய பின் அரச செலவில் அடக்கம் செய்யுமாறு நீதவான் ஆனந்தி கனகரட்ணம் உரிய தரப்பினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த சடலம் உடற்கூற்றுப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இரண்டாவது தடவையாக மன்னார் சௌத்பார் கடற்கரையில் மீட்கப்பட்டு அடையாளம் காண்பதற்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த குறித்த சடலம் மாறி அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உட் படுத்தப்பவுள்ள நிலையில் அச்சடலத்தை பார்வையிட உரிய தரப்பினர் வைத்திய சாலையின் பிரேத அறைக்குச் சென்ற போதே சடலம் மாறி அடக்கம் செய்யப்பட்ட விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த நிலையில் இரு சடலங்கள் தொடர்பான விசாரணை இன்று வியாழக்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் இடம் பெற்றது.
இதன் போது அடக்கம் செய்யப்பட்ட குறித்த சடலத்தை எதிர் வரும் 4 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு நீதவான்,சட்ட வைத்திய அதிகாரி,பொலிஸ் தடவியல் நிபுணர்கள்,திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் முன்னிலையில் தோண்டி எடுத்து உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் இன்று வியாழக்கிழமை உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மன்னார் நீதிமன்றம் உத்தரவிடாத நிலையில் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்ட உரிமை கோரப்படாத சடலத்தை தோண்டி எடுத்து உடற்கூற்று பரிசோதனையை மேற்கொள்ள உத்தரவு.
Reviewed by NEWMANNAR
on
October 02, 2014
Rating:

No comments:
Post a Comment