சேவைநலன் பாராட்டு விழா-Photo
மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபரும் சமய சமூகப்பணியாளருமான திரு.ஆ.ஐ.தயானந்தராஜா அவர்கள் யாழ் .இந்துக்கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று சென்றதை முன்னிட்டு , மன்னார் மாவட்ட இந்துமகாசபையின் ஒழுங்கமைப்பில் 27.09.2014 ல் நகரசபை மண்டபத்தில் சேவைநலன் பாராட்டு விழா மிகச்சிறப்பாக இடம்பெற்றது. பல்வேறு சமய சமூக நிறுவனங்கள் பங்கேற்று பொன்னாடை போர்த்தியும் ,மலர்மாலை அணிவித்தும் நினைவுச்சின்னங்கள் வழங்கியும் கௌரவித்தன.
மன்னார் மாவட்ட சிவபூமி இந்து இளைஞர் மன்றம் ,அறநெறிப்பாடசாலைகள் இணையம் ,சைவக்கலைஇலைக்கிய மன்றம் ,மன்னார் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசபை, நவசக்தி நற்பணி மன்றம் , இந்துக்குருமார் பேரவை , மனோகரக்குருக்கள் நற்பணிமன்றம்,தலைமன்னார் முத்துமாரியம்மன் ஆலயம்,உப்புக்குளம் சித்திவிநாயகர் ஆலய பரிபாலனசபை,உப்புக்குளம் வாழ்மக்கள் ,போன்ற பல நிறுவனங்களும் , மதத்தலைவர்களும், சட்டத்தரணிகளும் , வைத்தியர்களும் தனிநபர்கள் பலரும் இக் கௌரவிப்பில்கலந்து கொண்டனர் . இந் நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.
சேவைநலன் பாராட்டு விழா-Photo
Reviewed by NEWMANNAR
on
October 02, 2014
Rating:
.jpg)
.jpg)

No comments:
Post a Comment