அண்மைய செய்திகள்

recent
-

2015ஆம் நிதி ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்க நடவடிக்கை

2015 ம் நிதி ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 24ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப் படவுள்ளதாக நிதி அமைச்சின் முக்கிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளதால் முன்கூட்டியே வரவு செலவுத் திட்டத்தை சமர்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார். 

வரவு – செலவுத் திட்ட வரைபு முன்மொழிவு பிரேரணை பிரதம டி.எம். ஜயரட்னவால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி 2014 ம் நிதியாண்டைவிட 2015 ம் நிதியாண்டில் அரசாங்கத்தின் செலவு 17% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. 

2014 ம் ஆண்டில் அரசாங்கத்தில் செலவு தொகை 2599 பில்லியனாக இருக்கும் நிலையில் 2015 ம் ஆண்டு 3053 பில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2015 ம் ஆண்டில் அரசாங்கத்தின் செலவு 450 பில்லியனால் அதிகரித்துள்ளது.
2015ஆம் நிதி ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்க நடவடிக்கை Reviewed by NEWMANNAR on October 08, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.