மன்னாரில் மனோன் மணி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் 'கல்விக்கு கரம் கொடுப்போம்' எனும் கருப்பொருளில் கணித விஞ்ஞான பிரிவுகளில் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட செயலமர்வு ஆரம்பிப்பு.
கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் கருப்பொருளில் மனோன் மணி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இவ்வருடம் மன்னாரில் கணித விஞ்ஞான பிரிவுகளில் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட இலவச செயலமர்வு இன்று வியாழக்கிழமை (7) காலை சம்பிரதாயபூர்வமாக மன்னார் நகர மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மன்னார் கல்வி வலயத்தின் மேற்பார்வையின் கீழ் மனோன் மணி அறக்கட்டளையின் ஸ்தாபகர் அகஸ்ரின் சவேரியான் அவர்களின் நிதி பங்களிப்பிலும் வழி நடத்தலின் கீழ் மன்னார் வலயக்கல்வி பணிப்பாளரின் அனுமதியுடன் மனோன்மணி அறக்கட்டளையின் பணி குழாம் , மற்றும் மன்னார் வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் , ஆசிரியர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மன்னார் கல்வி வலயத்திற்கு உட்பட்ட கணித விஞ்ஞான பிரிவுகளில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்களுக்கான ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் கணித விஞ்ஞான பிரிவுகளில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை அடையும் நோக்கில் இவ்வாறான செயல் அமர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அத்தோடு ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் குறித்த செயலமர்வானது இடம்பெறும் . இதற்கு மேல் அதிகமாக பல பிரதேசங்களில் அறக்கட்டளையின் நிதி அனுசரணையில் மாலை நேர மேலதிக வகுப்புகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
May 07, 2026
Rating:


No comments:
Post a Comment