அண்மைய செய்திகள்

recent
-

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்


சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்ற 3 பேர் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதால் அதிமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர். மே-லும் பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. மேலும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமியும் உச்ச நிதிமன்றத்தில் ஆஜராகியுள்ளர். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, மற்றும் நீதிபதிகள் மதன் பி.லோகூர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் 3 பேர் கொண்ட அமர்வு விசாரித்து வருகின்றனர்.  21 நாளுக்கு பிறகு சிறையில் இருந்து ஜெயலலிதா விடுதலையாகிறார்.

பாலி நாரிமன் வாதம்

ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் வாதாடி வருகிறார். ஜெயலலிதாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க கோரிக்கை விடுத்துள்ளார். சிறையில் இருப்பதால் ஜெயலலிதாவால் உரிய மருத்துவ வசதிகளை பெற முடியவில்லை என்றும், ஜாமீன் பெறுவது ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்டு உள்ள அடிப்படை உரிமை என்று ஜெ. தரப்பில் ஆஜரான பாலி நாரிமன் வாதாடி வருகிறார். 

நாரிமன் தந்த உறுதி

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் தருவதால் தமிழகத்தில் வன்முறை எதுவும் நிகழாது என்று நாரிமன் உறுதி அளித்துள்ளார். ஜாமீன் வாய்ப்பை மருத்துவ பரிசோதனைக்கு மட்டுமே ஜெயலலிதா பயன்படுத்துவார் என்றும், ஜாமீன் தரப்படுவதால் ஜெயலலிதா எங்கும் தப்பி சென்றுவிட மாட்டார் என்று ஜெயலலிதா தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் உறுதி அளித்தார். இதனை ஏற்ற உச்ச நிதிமன்ற 3 பேர் கொண்ட அமர்வு ஜாமீன் வழங்கியது.

சசிகலாவுக்கு ஜாமீன்

சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

அதிமுகவினர் கொண்டாட்டம்

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்ததால் அதிமுக&வினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். சென்னையில் அதிமுக தலைமை அலுவலகம் முன்பு தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

3 மாதத்தில் முடிக்க உத்தரவு

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிபந்தனை விவரம்

ஜாமீனில் விடுதலையாகும் ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. மேல்முறையீட்டு ஆவணங்களை டிசம்பர் 18&க்குள் கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினர். ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட 3 வாரத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

சிறை முன் ஆரவாரம்

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை முன் திரண்டிருந்த அதிமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.  

நீதிபதிகள் கண்டிப்பு

சிறப்பு நிதிமன்ற நீதிபதி குன்ஹாவுக்கு அச்சுறுத்தல் ஏதும் விடுக்க கூடாது என்றும் நீதிபதிகளை அவதூறு செய்யும் வகையில் பிரசுரங்கள் எதுவும் வெளியிடக்கூடாது என்று உச்ச நீதிமன்ற நிதிபதிகள் கண்டிப்பு தெரிவித்துள்ளனர். சுப்பிரமணிய சாமி வீட்டுக்கு உரிய பாதுகாப்பு தரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தீர்ப்புக்கு தடை இல்லை

ஜெயலலிதா குற்றவாளி என்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை என்றும் நான்கு ஆண்டு தண்டனையை மட்டும் நிறுத்தி வைத்து இடைக்கால ஜாமீன் வழங்கப்படுவதாக உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் Reviewed by NEWMANNAR on October 17, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.