பாப்பரசரின் இலங்கை விஜயம் நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்கும்; மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்
பாப்பரசர் பிரான்சிஸ் இலங்கை வருவதன் மூலம் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான நல்ல சமிஞ்சை உருவாகும் என மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் இலங்கை வரும்போது, போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரங்களை அவர் கேட்டறிவதன் மூலம் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்க நன்மை ஏற்படக்கூடும்.
அது மட்டுமன்றி, ஓர் அரசியல் தீர்வு ஏற்படுவதற்கும் திருந்தந்தையின் வருகை வழிவகுக்கும் என்று எதிர்பார்த்திருப்பதாகவும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாப்பரசரின் இலங்கை விஜயம் நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்கும்; மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்
Reviewed by NEWMANNAR
on
October 08, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 08, 2014
Rating:

No comments:
Post a Comment