கிறீன் காட்டுக்கான விண்ணப்பம் கோரல் ஆரம்பம்
ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் 2016ஆம் ஆண்டுக்கான அதிர்ஷ்ட குலுக்கல் மூலம் பல்வகைமை குடியேற்ற விஸா (கிறீன் கார்ட்) திட்டத்துக்கான விண்ணப்பங்கள் இன்று(01) கோரப்படுதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
'கிறீன் கார்ட் (Green Card) அதிர்ஷ்ட குலுக்கல்' என அறியப்படும், ஐக்கிய அமெரிக்காவுக்கான 2016ஆம் ஆண்டுக்கான பல்வகைமை குடியேற்ற விஸாவுக்கான அதிர்ஷ்ட குலுக்கல் நிகழ்ச்சிக்கான இலங்கை மற்றும் மாலைதீவு பிரஜைகளுக்கான விண்ணப்ப காலம் 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படுகின்றது.
இதன்படி, www.dvlottery.state.gov. என்ற இணையத்தள முகவரியின் ஊடாக அமெரிக்காவின் பல்வகைமை குடியேற்ற விஸாவுக்கு விண்ணப்பிக்க முடியும்.
பல்வகைமை குடியேற்ற விஸா அதிர்ஷ்ட குலுக்கல் நிகழ்ச்சியானது எழுந்தமானமாக தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு குடியேற்ற விஸா நேர்காணலுக்கான சந்தர்ப்பத்தை அளிக்கின்றது. நேர்காணலில் தெரிவு செய்யப்படும் போது அவர்கள் ஐக்கிய அமெரிக்காவில் சட்டரீதியாக நிரந்த வதிவிட உரிமையைப் பெறுவார்கள்.
விண்ணப்பத்தின் போது நினைவில் கொள்ள வேண்டிய சில விடயங்கள் பின்வருமாறு:
• இணையம் ஊடான பல்வகைமை குடியேற்ற விஸா முறைமையின் விண்ணப்ப காலம் 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இரவு 9.30க்கு ஆரம்பித்து, நவம்பர் மாதம் மூன்றாம் திகதி அதேநேரத்தில் நிறைவுக்கு வருகின்றது.
• இலங்கை மற்றும் மாலைதீவுகள் ஆகிய தகைமை பெற்ற நாடுகளின் பிரஜைகள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
• விண்ணப்பதாரிகள் ஒருமுறை மாத்திரமே விண்ணப்பிக்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
• விண்ணப்பதாரிகள் பல்வகைமை குடியேற்ற விஸா நிகழ்ச்சிக்கு தகைமை பெற்றவர்களாக இருத்தல் வேண்;டும். எனவே, விண்ணப்பிப்பதற்கு முன்னர் விண்ணப்பிப்பதற்கான உங்களுடைய தகைமை குறித்து உறுதி செய்து கொள்ளுங்கள்.
• விண்ணப்பதாரிகள் விண்ணப்பத்தின் உறுதிப்படுத்தப்பட்ட இலக்கத்தை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். நீங்கள் நேர்காணலுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளீர்களா என்பதனை அறிந்து கொள்வதற்கு அந்த இலக்கம் அவசியமானதாகும்.
• இணையம் வழியான விண்ணப்பம் முற்று முழுதாக இலவசமானதாகும். எவ்விதமான மறைமுக செலவுகளும் இல்லை. ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்துடன் தொடர்புகொண்டவர்கள் எனத் தம்மை அறிமுகப்படுத்தும் போலி நபர்கள் அல்லது நிறுவனங்கள் தொடர்பில் அவதானமாக இருக்கவும். விண்ணப்பம் ஒன்றை பூர்த்தி செய்வதற்கும், சமர்ப்பிப்பதற்கும் மூன்றாம் தரப்பின் உதவி அவசியமாக இருக்காது.
தகைமைகள் குறித்த விபரங்கள் உள்ளடங்கலாக, நிகழ்ச்சி குறித்து மேலதிக தகவல்களையும் அறிந்து கொள்ள விரும்பினால், ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் http://srilanka.usembassy.gov/visas/diversity-visa-lottery-program.html என்ற இணையத்தளத்திற்கு விஜயம் செய்து பெற்றுக் கொள்ள முடியும். ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் விளக்கங்கள் தரப்பட்டிருக்கும். அதிர்ஷ்ட குலுக்கலுக்கு விண்ணப்பிப்பதற்கான இணைய முகவரி: www.dvlottery.state.gov.
அறிவித்தல்களும், அடுத்த கட்டமும்
2015 மே மாத ஆரம்பத்தில் விண்ணப்பதாரிகள் www.dvlottery.state.gov என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு விஸாவுக்கான நேர்காணலுக்கு நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்களா என அறிந்து கொள்ள முடியும். நீங்கள் தெரிவு செய்யப்பட்டு இருப்பின் ஐக்கிய அமெரிக்கப் பேராளர் அதிகாரியோடு (U.S.Consular Officer) ஒரு நேர்காணல் இடம்பெறும். நீங்கள் விஸாவைப் பெறத் தகுதி பெற்றுள்ளீர்களா என்பதனை அவரே தீர்மானிப்பார். இதில் மருத்துவ பரிசோதனை, விஸா கட்டணம் மற்றும் தனிநபர் நேர்காணல் என்பன உள்ளடங்கும்.
கிறீன் காட்டுக்கான விண்ணப்பம் கோரல் ஆரம்பம்
Reviewed by NEWMANNAR
on
October 02, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 02, 2014
Rating:


No comments:
Post a Comment