அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு நந்திக்கடலில் தொடர்ந்தும் கரையொதுங்கும் மீன்கள்...

முல்லைத்தீவு நந்திக்கடலில் தொடர்ந்தும் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். நந்திக்கடல் வடக்காறு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் மீன்கள் இவ்வாறு இறந்த நிலையில் கரையொதுங்கிக் கொண்டிருப்பதாகவும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

சிலாப்பி, கெளிறு, மணல், மன்னா, கூறல் உள்ளிட்ட மீன்களே இவ்வாறு இறந்த நிலையில் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இன்று வியாழக்கிழமையுடன் ஐந்தாவது நாளாகவும் சுமார் 50 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான மீன்கள் இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

 இவ்வாறு கரையொதுங்கி வரும் மீன்களை வட்டுவாகல் கிராமிய கடற்தொழில் மீன்பிடி கூட்டுறவு சங்கத்துடன் இணைந்து கறைத்துறைப்பற்று பிரதேச சபை மற்றும் மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் இணைந்து துப்பரவு செய்யும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். வட்டுவாகல் கிராமிய கடற்தொழில் மீன்பிடிக் கூட்டுறவுச்சங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள 70இற்கும் அதிகமான மீனவர்கள், கரையொதுங்கும் இம்மீன்களை துப்பரவு செய்வதற்காக ஈடுபட்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு நந்திக்கடலில் தொடர்ந்தும் கரையொதுங்கும் மீன்கள்... Reviewed by NEWMANNAR on October 02, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.