அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 4 மாடி கொண்ட புதிய மாவட்டச் செயலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களினால் மாவட்டச் செயலகங்களை வலுப்படுத்தும் வேலை த்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டச் செயலகத்தின் புதிய நான்கு(4) மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுஇன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணிக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம் பெறவுள்ளது.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களினால் ஒதுக்கப்பட்ட 223 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த கட்டிடம் அமைக்கப்படவுள்ளது. குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு விருந்தினர்களாhக அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டி.எஸ்.செனவிரத்தின,கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிஸாட் பதியுதீன், அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் விஜய தஸநாயக்க ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் 4 மாடி கொண்ட புதிய மாவட்டச் செயலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு. Reviewed by NEWMANNAR on October 14, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.