அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் கிராம மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு.-Photo

தலைமன்னார் கிராம மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,எஸ்.வினோ நோகராதலிங்கம் மற்றும் வடமாகாண மீன்பிடி போக்குவரத்து  அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோர் நேற்று புதன் கிழமை(1) மாலை குறித்த கிராமத்திற்குச் சென்று மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். 

 இதன் போது அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்,வடமாகாண அமைச்சருக்கும் மக்கள் மகத்தான வரவேற்பளித்தனர். குறித்த மக்கள் தற்போது எதிர் நோக்கி வரும் அடிப்படை  பிரச்சினைகள் தொடர்பாகவும் குறிப்பாக மீனவர்களும்,ஏனைய  சுய தொழில் மேற்கொள்ளுகின்றவர்களும் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. அதே வேளை மாதர்,கிராம அபிவிருத்திச்சங்கங்களின் தற்போதைய நிலை தொடர்பிலும் எதிர்காலத்தில் குறித்த சங்கங்கள் வருவாயை ஈட்டிக்கொள்ளும் வகையில் மேற்கொள்ளவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. 

 இதன் போது வடமாகாண அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து குறித்த கிராமத்திற்கு செய்ய வேண்டிய வேளைத்திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் பலர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர்.









தலைமன்னார் கிராம மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு.-Photo Reviewed by NEWMANNAR on October 02, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.