அண்மைய செய்திகள்

recent
-

முசலி பிரதேச செயலகத்தினால் மக்களுக்கு உருளைக்கிழங்கு வினியோகம்.-Photo

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி நிலையினை கருத்தில் கொண்டு அதனை நிவர்த்தி செய்யும் முகமாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சினால் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கிராமங்களில் வாழும் மக்களுக்கு வழங்குவதற்கென 7500 கிலோ உருளைக்கிழங்கு முசலி பிரதேசச் செலாளரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் அவை நேற்று புதன் கிழமை(1) மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

 குறித்த உருளைக்கிழங்கு முசலி பிரதேசத்தில் உள்ள 21 கிராம அலுவலகர் பிரிவில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு குடும்பத்திற்கு 3 கிலோ உருளைக்கிழங்கு வீதம் முசலி பிரதேசச் செயலாளர் செல்லத்துறை கேதீஸ்வரன் மற்றும் முசலி பிரதேச சபை தவிசாளர் எம்.எஹியாபாய் ஆகியோரினால் நேற்று(1) மாலை கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் பள்ளி நிவர்வாகம் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டன. 

 குறித்த நிகழ்வில் பிரதேசச் செயலக திட்டமிடல் பணிப்பாளர்,கிராம அலுவலகர்கள்,திவிநெகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.




முசலி பிரதேச செயலகத்தினால் மக்களுக்கு உருளைக்கிழங்கு வினியோகம்.-Photo Reviewed by NEWMANNAR on October 02, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.