கைதிகளுக்கு தொலைபேசி வசதி
சிறைச்சாலைகளில் கைதிகளுக்கான தொலைபேசி வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான திட்டமொன்றை புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு ஆரம்பித்துள்ளது.
இதன் பிரகாரம் வெலிக்கடை சிறைச்சாலையில் எட்டு தொலைபேசி கூடங்கள் இன்று பிற்பகல் 3 மணிக்கு திறந்துவைக்கப்படவுள்ளன.
இதன்மூலம் தமது குடும்ப அங்கத்தவர்களுடன் பேசுவதற்கும், வழக்குகள் தொடர்பில் சட்டத்தரணிகளுடன் தகவல் பரிமாற்றிக் கொள்வதற்கும் கைதிகளுக்கு வசதிகள் கிட்டவுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சிவலிங்கம் சதீஷ்குமார் தெரிவிக்கின்றார்.
கைதிகளுக்கு தொலைபேசி வசதி
Reviewed by NEWMANNAR
on
October 15, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 15, 2014
Rating:


No comments:
Post a Comment