மன்னார் எமில்நகர் பூண்டிமாதா முன்பள்ளிக்கு பேண்ட் வாத்திய கருவிகள் வழங்கிய நிகழ்வு-Photo
மன்னார் எமில்நகர் பூண்டிமாதா முன்பள்ளி இற்றைக்கு 25 வருடங்களுக்கு மேலாக இயங்கிவருகின்றது. இதற்கு நிலையான ஒரு கட்டடம் இல்லாதிருந்தபோது பிரதேச செயலாளரின் அனுமதியுடன் எமில்நகர் கிராம அபிவிருத்தி அமைப்பின் பொறுப்பிலுள்ள கட்டடம் விடுவிக்கப்பட்டது.
இங்கு மிகமிக வறிய குடும்பத்தை சார்ந்த சிறார்களே கற்கின்றனர், இவர்களின் நிதியினைக் கொண்டு ஈடுசெய்ய முடியாத பலதேவைப்பாடுகள் இவ் முன்பள்ளிக்கு உள்ளன. அவற்றில் ஒன்றுதான் பேண்ட் வாத்திய கருவிகள்.
எமது ஊர் சார்ந்த வெளிநாட்டில் வசிக்கும் திரு.கிங்சிலி, திரு.சுரேஸ், திரு.சிறி ஆகியோரினால் வழங்கப்பட்ட உதவி அவர்கள் சார்பாக அவர்களது உறவினர்கள் கடந்த 04.10.2014 திகதி சனிக்கிழமை வைபவ ரீதியாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டு பேண்ட் வாத்திய கருவிகள் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது..
இவ் உதவியினை செய்தவர்களுக்கு முன்பள்ளி சமூகம் நன்றியினைத் தெரிவித்தும் நிற்கின்றது.
மன்னார் எமில்நகர் பூண்டிமாதா முன்பள்ளிக்கு பேண்ட் வாத்திய கருவிகள் வழங்கிய நிகழ்வு-Photo
Reviewed by NEWMANNAR
on
October 14, 2014
Rating:

No comments:
Post a Comment