அண்மைய செய்திகள்

recent
-

அளப்பரிய சேவை செய்யும் (MARDAP) – Mannar Association For Rehabilition of Differently Able People. இன் சேவைகள் பற்றிய தகவல்கள்

மன்னார் இணையத்தின் விம்பம் பகுதியில் அளப்பரிய சேவை செய்யும் (MARDAP) – Mannar Association For Rehabilition  of Differently Able People. இன் சேவைகள் பற்றிய தகவல்கள் ,,,,,,,,,,,

அழகான இவ்வுலகில் ஆண்டவன் படைப்பில் அதிசயப்படைப்பானவன் மனிதன் தான். ஆறறிவு அதாவது பகுத்தறிவுடன் பிறந்தவன். மனிதனே நல்லது கெட்டது என பகுத்தறிந்து ஆனந்தமாய் வாழ அவன் கண்டு கொண்ட விடயங்கள் ஏராளம். இயற்கையை வென்று ஆச்சரியமான முறையில் செயற்கை உலகையே படைத்திருக்கிறான். கலியுகத்தில் அவதாரம் எடுத்திருக்கின்றான். அதிநவீன விஞ்ஞானத்தோடு மெய்ஞானத்தை வென்று ....... ஆனாலும் சந்தோசமாக எல்லா மனிதர்களுமே வாழ்கிறார்களா? இல்லை...... ஆக வாழ்வில் துன்பமும் துயரமும்தான். ...........

“அரிது அரிது மானிடராதல் அரிது
மானிடராயினும் கூன் குருடு செவிடு பேடு
நீங்கிப் பிறத்தல் அரிது”

இது ஒளவையார் பாடலின் ஒரு பகுதி.

இப்பாடலை நன்கு புரிந்துகொண்டால் நம் வாழ்வின் உடல் உறுப்புக்களின் பங்கு முக்கியத்துவம் விளங்கும். ஆம் எம் உடலிலிருந்து ஏதாவது ஒரு உறுப்பு ஐம்பொறி இழந்தாலும் இல்லாமல் இருந்தாலும் வளர்ச்சி குறைவாக இருந்தாலும் நம்மை பலபேர் பல பெயர் கொண்டு அழைப்பார்கள். வலது குறைந்தோர், ஊனமுற்றோர், சுயாதீனமுற்றோர், அங்கவினர்கள், மாற்றுத் திறனாளிகள், இப்போது விசேட தேவையுடையோர் என அழைக்கப்படுகின்ற மாற்றுவலுவுள்ளோர் அல்லது மாற்றாற்றலுடையோரைப்பற்றியவர்களில் இலங்கையில் இயல்பாகவே இருபது இலட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருந்தபோதும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களோடு சேர்த்து சுமார் 30 இலட்சம் பேர் மாற்றுத்திறனாளிகளாகக் காணப்படுகின்றனர். இது இலங்கை சனத்தொகை இரண்டரை கோடியில் 10% ஆகும். எம் நாட்டில் மட்டுமல்ல ஏனைய நாடுகளிலும் காணப்படுகின்றது. .... நாம் இங்கு காண இருப்பது மன்னார் மாவட்டத்தினை. .....

மாற்று வலுவுள்ளோர் அமைப்பின் பெயர்?

MARDAP மன்னார் மாற்றாற்றலுள்ளோர் புனர்வாழ்வு சங்கம். இச்சங்கமானது மன்னார், வங்காலை, முருங்கன் இம் மூன்று இடங்களில் சேவையினை வழங்கி வருகிறது. தலைமையிடமாக மன்னாரில் வயல்வீதி பெற்றாவில் அமைந்துள்ளது.

இவ்வமைப்பின் தோற்றமும், நிர்வாகமும் - (MARDAP)

(MARDAP) – Mannar Association For Rehabilition  of Differently Able People.

இவ்வமைப்பானது 2002 ஆரம்பிக்கப்பட்டது. இதன் நிர்வாக இயக்குனர் அருட்சகோதரி எஸ். ஆர். ஜோசப்பின் மேரி. நிர்வாகக்குழு ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகை அவர்களும் நிர்வாக உத்தியோகத்தராக திருமதி. ஜெசி அரியரட்ணம் அவர்களுடன் பதினாறு பணியாளர்கள் இங்கு பணி புரிகின்றார்கள். ........... சேவை மனப்பாங்கோடு. ......

இவ்வமைப்பின் சேவை பற்றி ....

இவ்வமைப்பானது (MARDAP) மன்னாரில் உள்ள மாற்றாற்றலுள்ளோர்களில் எம்மோடு இணைந்துள்ளவர்களில் இரு பிரிவாகப் பிரித்து 14வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கல்வியினையும் 14 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சிறுகைத்தொழில் பயிற்சியினையும் வழங்கி வருகின்றோம். 14 வயதிற்குட்பட்டோருக்காக விசேட விதமாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு அவர்களுக்கான கல்வியினை வழங்குகின்றோம். 40 – 45 பிள்ளைகள் உள்ளனர். இவர்களை அதிகாலை 6.00 மணிக்கு எமத நிறுவனத்திலிருந்து வாகனம் மூலம் ஒவ்வொரு மாற்றாற்றல் உடையோர் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கொணர்ந்து சரியாக 8.30 மணிக்கு கல்வியினை கற்றுக்கொடுக்க ஆரம்பித்து விடுவோம். 10 மணியளவில் சத்துணவு வழங்குவோம். பின் மீண்டும் 1 மணியளவில் கல்வியை முடித்து அவர்களின் வீடுகளிற்கு கொண்டு போய் பத்திரமாக சேர்ப்போ.ம். இவ்வாறு தான் தினமும் நடைபெறுகிறது. இவர்களுக்கான கல்விச் செயற்பாடு.

பயிற்சியானது எவ்வாறு வழங்குகின்றீர்கள்?

பயிற்சி எனும் போது 14 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதில் உள்ளடக்கப்படுவர். மெழுகுதிரி செய்தல், சந்தனக்குச்சு தயாரித்தல், கால் துடைப்பான் செய்தல். சிறுபிள்ளைகளுக்கான தொப்பி காலுறை, சட்டை, மேசை விரிப்பு போன்றவற்றையும் சில கைவினைப் பொருட்கள் செய்தல் பயிற்சியினை வழங்குகின்றோம்.

இப் பயிற்சியின் மூலம் கிடைக்கும் நன்மை?

இப் பயிற்சியினை நிறைவு செய்கின்றார்கள். எல்லாவிதமான பொருட்களையும் நாமே வழங்குவோம். அவர்கள் செய்கின்ற பொருட்களை மெழுகுதிரி சந்தனக்குச்சு என்பவற்றை கோயில்களுக்கும் ஏனைய பொருட்களை கடைகளுக்கும் கண்காட்சி நடைபெறுகின்ற இடங்களிலும் வைத்து விற்பனை செய்வோம். பலர் இங்கு வந்து நேரடியாக பெற்றும் செல்வார்கள். இவ்விற்பனைகள் மூலம் கிடைக்கின்ற பணத்தினை 3 பிரிவாக பிரித்து 1 பகுதியினை ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் போடுவோம். இவ்வங்கிப் புத்தகமானது எமது நிறுவனத்திடம் தான் இருக்கும். யாருமே பணத்தினை எடுக்க முடியாது. மாற்றாற்றல் உள்ளோரை தவிர மீதியுள்ள இரு பகுதியினையும் இவர்களுக்கான உற்பத்திப் பொருட்கள், இதர செலவுகள் உணவு என்பனவற்றிற்கு பயன்படுத்திக் கொள்கின்றோம். ... ஒரு கிழமையில் 1000 மெழுகுதிரிகள் தயாரிப்பார்கள்.

இவ்வமைப்பின் எதிர்காலம் பற்றி (MARDAP)?

எதிர்காலம் எனும்போது சொல்லமுடியவில்லை. ஆனால் 2002இலிருந்து 2014 இன்றுவரை எந்தக் குறையுமில்லாமல் இயங்கி வருகின்றதென்றால் இதுபோலவே இனிவரும் காலத்திலும் எந்தத் தடையுமில்லாமல் இயங்கும் என்பதில் ஐயமில்லை. இவ்வமைப்பை நாங்கள் நிறுத்தினால் இப்பிள்ளைகளின் நிலை இன்னும் மோசமானதாகிவிடும். விட்டில் விடப்படும் அவர்களின் நிலை சொல்லவே தேவையில்லை. பல பெற்றோர்கள் இப்படியான மாற்றாற்றல் உள்ள பிள்ளைகளை கவனிப்பது குறைவுதான். இங்கு வந்து எல்லாப் பிள்ளைகளும் ஒன்றாய் ஒரே குழுவாய் பழகி செயற்படும்போது நல்லதொரு சமூக உறவையும் நல்ல பழக்க வழக்கத்தினையும் பெறுகிறார்கள். இவ்வாறு நல்லதொரு நிலைக்குக் கொண்டு வந்த அவர்களுக்காக இயங்கும் அமைப்பை இடையில் நிறுத்திவிட முடியாது. நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டாலும் இதை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்ற ஆதங்கத்தில் செயற்பட்டு வருகின்றோம்.

இவ்வமைப்பினை MARDAP தொடர்ச்சியாக கொண்டு செல்ல நிதிப்பிரச்சினையை எவ்வாறு சமாளிக்கின்றீர்கள்?

அருமையான கேள்வி இவ்வமைப்பினைக் கொண்டு நடத்துவதற்கு பணம் முன்பு பல வெளிநாட்டு அமைப்புக்கள் பல நிறுவனங்கள் மூலம் கிடைத்தது. தற்போது நிலமை மிகவும் மோசமாகவுள்ளது. மிகக்குறைவாக மட்டுப்படுத்தப்பட்டு குறுகிய அளவில்தான் உள்ளது. அதை ஈடு செய்யும் நோக்கில் தொழில் பயிற்சி நிலையம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். அதை சமூக சேவைகள் அரச அமைப்பினால் ஒரு வருடத்திற்கு மட்டுமான சிறு கைத்தொழில் பயிற்சியினை (மெழுகுதிரி, சந்தனக்குச்சு, கால்துடைப்பம்) செய்கின்றது. இதன்மூலமும் உள்நாட்டிலுள்ள வெளிநாட்டிள்ள அமைப்புக்கள் நல்ல உள்ளங்கள் பலரின் இணைப்புக்களால் தான் இவ்வமைப்பானது இயங்கி வருகின்றது. .....

மன்னார் மாவட்டத்தில் உள்ள மாற்றாற்றல் உள்ளோர் தொகையும் அவர்களுக்கு வழங்கப்படும் சேவையும்?

மன்னாரைப் பொறுத்த வரையில் 2500 தொடக்கம் 3000 பேருக்கும் அதிகமாகத்தான் இருப்பார்கள். முருங்கனில் ஒரு பாடசாலை அமைத்துள்ளோம். அங்கு 10 பிள்ளைகளும் வங்காலையில் உள்ள பாடசாலையில் 6 பிள்ளைகளும் தான் ஒழுங்காக வந்து கல்வி பயில்கின்றார்கள். காரணம் இவர்களுக்கான போக்குவரத்து வசதியில்லை. பெற்றோர்களுக்கும் வசதியின்மையும் சிரமமும்தான் பலர் வீட்டிலே முடங்கிக் கிடக்கின்றார்கள். மன்னார் பள்ளியில் 40 பேரும் ஒழுங்காக வரக் காரணம் நாம் வாகனம் அனுப்பி வீடுவீடாக ஏற்றி வந்து கல்விச் செயற்பாடு முடிந்த பின்பு மீண்டும் கொண்டு போய் விடுவதால் தான் இவ்வாறு தொடர்ச்சியாக செய்வதற்கு முடியுமா என்றால் இல்லை. வாகனம் உள்ளது. தொடர்ச்சியாக ஏற்றி இறக்க எரிபொருள் தேவையல்லவா.... சிந்தியுங்கள்…

தற்காலத்தில் கல்வி கற்பித்தல் என்பதே கடினம். அதுவும் இவ்வாறான விசேட தேவையுள்ளவர்களுக்கு மாணவர்களுக்கு கல்வி கற்பித்தலுக்கு புரிந்துணர்வு, பரிவு, இரக்கம், பொறுமை அன்பு கொண்ட ஆசிரியர்களே தேவை. அவர்களின் தெரிவு.?

கல்வி எனும் போது பாடசாலைக்கல்வியைப் போல பாடத்திட்டத்தினை உள்ளடக்கியதாக இருப்பது போல இவர்களுக்கு கல்வி கற்பிப்பதில்லை. ஆனால் இவர்களுக்கு என்ன தேவை வாழ்க்கை கல்வி முறையினைத்தான் கற்பிப்போம். சமூகமாக வாழவும் சமூகத்தை புரிந்து கொள்ளவும் ஒருவர் ஒருவரோடு சேர்ந்து பகிர்ந்துண்ணவும் விளையாடவும் கூட்டாக இணைந்து சிறுசிறு வேலைகள் செய்தல் ஒற்றுமையதக இருத்தல் போன்றவற்றினை புகட்டுவோம். 14 வயதின் பின் அவர்களுக்கான சிறுகைத்தொழில் பயிற்சியினை வழங்குவோம் அவர்களின் வாழ்வை அவர்களின் கைகளிலே ஒப்படைத்து விடுவோம்...

உங்கள் மையத்தில் இருந்து பிள்ளைகள் பாடசாலை சென்று கற்க விரும்புகின்றார்களா?

அவர்கள் விரும்பினாலும் பாடசாலைகள் ஏற்றுக் கொள்ள வேண்டுமே..!
அதைவிட இங்குள்ளவர்களில் பலர் பாடசாலைகளில் இருந்து கொண்டுவந்து விடப்பட்டவர்கள் தான் ஏன் என்றால் இவ்வாறுள்ள பிள்ளைகளின் செயற்பாட்டோடு ஒத்துப்போகாமல் தனித்து நின்று வேறு கோணத்தில் பார்க்கின்றார்கள். இவர்களுக்கான கல்வியினை எம்மைப் போன்ற மையங்களினால் (MARDAP) மட்டுமே செய்ய முடியும் என்று எண்ணுகிறார்கள்...

கல்வி, பயிற்சியோடு இல்லாமல் இம் மாணவர்களை வேறு துறைகளில் பங்கு பற்றச் செய்கிறீர்களா..?

ஆம் நிச்சயமாக கலைத் துறையில் நா.டகம், பாடல், நாடகம் பழக்கி கலை கலாசார விழாக்களிலும் உதாரணமாக கடந்த நானாட்டான் கலாச்சார நிகழ்விலும் இம் மாதக் கடைசியில் கைதடியில் வில்லுப் பாட்டு நிகழ்ச்சியில் பங்குபற்ற அனுப்பவுள்ளோம். அது போல விளையாட்டுத் துறையில் ஒவ்வொரு வருடமும் கொழும்பு வவுனியா போன்ற இடங்களிலும் நடைபெறுகின்ற விளையாட்டுப் போட்டிகள் அனைத்திற்கும் இவர்களை கூட்டிச்சென்று கலந்து கொள்ளச் செய்வோம். பலமுறை வெற்றியும் பெற்றுள்ளார்கள். இவர்களின் போக்குவரத்து தங்குமிடம், உணவு போன்ற செலவுகளை ஈடுசெய்ய பலரின் ஒத்துழைப்புடனே நடைபெறுகின்றது. இன்னும் தொடரும்.

இவ்வமைப்பின் நோக்கமும் பணியாளர்களின் தன்மையும்?

இவ்வமைப்பின் நோக்கம் மாற்றாற்றல் உள்ளோரின் வாழ்வில் முன்னேற்றமே. எம் மையத்தின் நிர்வாக இயக்குனர் அருட்சகோதரி ஜோசப்பின் மேரி அவர்களின் தூய்மையான எண்ணத்தில் உருவானதுதான். ஒரு பாடசாலையை கட்டுவதோ ஒரு கோயிலை கட்டுவதோ பெரிய விடையமல்ல. இவ்வாறான பிள்ளைகளுக்கு உதவுதல் என்பது எவ்வளவு பாரிய செயல் சேவை மனப்பாங்கு என்பது என்னுடைய கருத்து. அது போல் இங்கு வேலை செய்யும் பணியாளர்கள் எனும் போது சம்பளம் அவர்களுக்கு ஒரு பெரிய விடையமே அல்ல. அதை அவர்கள் பெரிதாக எதிர் பார்க்கவும் இல்லை. அவ்வாறு எதிர் பார்த்திருந்தால் இவ்வமைப்பை விட்டு விலகிச் சென்று இருப்பார்கள். இதுவரை யாருமே விலகிச் செல்லவில்லை. இங்கு நான் பெரிது நீ பெரிது இந்த வேலையை மட்டும் தான் நான் செய்வேன் என்று இல்லாமல் எல்லோரும் ஒற்றுமையாக கலந்து எம் பணிகளில் ஈடுபடுவோ.ம். அவ்வாறு இணைந்து செய்வதால் தான் நிறுவனம் வெற்றியாக இயங்கிக் கொண்டு இருக்கின்றது.


மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் கடன் உதவியினை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்வீர்கள்?

இவர்களுக்கு கடன் உதவி வழங்கும் போது அவர்களின் நிலையினையும் எங்களிடம் இருக்கும் தேவையானவர்களின் எண்ணிக்கையினரையும் தேவையினையும் கருத்தில் கொண்டே கடன் உதவியினை வழங்குவோம். தொகையாக 10000ஃஸ்ரீ ரூபாவினை வழங்கினால் மாதா மாதம் 1000 ரூபா வீதம் செலுத்தக் கூடியதாக இருக்கும். ஒரு வருடத்தின் உள் செலுத்தினால் தானே அது பிரியோசனமான கடன் திட்டம் ஏன் என்றால் ஒருவருக்கு ஒவ்வொருவரினதும் மாத கொடுப்பனவில் இருந்து தான் வேறொருவருக்கு கடன் வழங்க முடியும். எல்லாமே சுழற்சி முறையில் தான் சட்டம் உள்ளது. ஆனால் கட்டளையிடுவதில்லை. எங்கள் சேவையை விளக்கமாக சொல்வோம். எல்லோரும் பயன் பெற வேண்டும் என்பதுதான் எமது நோக்கம்...

தங்களின் (MARDAP) நிறுவனத்தினால் மேலதீக திட்டம் ஏதும் உள்ளதா..?

ஆம் நிறையவே உள்ளது திட்டங்கள் பலவுள்ளன. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்தி போதுமான பண்ம்தான் இல்லை. இந்தக் குறையை நிவர்த்தி செய்தால் இன்னும் பல திட்டங்கள் வெற்றி பெறும். இவர்களுக்கான கல்விக் கூடம் முதல் ஓலைக் கொட்டிலாகத் தான் இருந்தது. தற்போது தான் கட்டிடமாக மாறியுள்ளது. காரணம் பல நல்ல உள்ளங்களின் உதவியால் தான் கீழ்த் தளத்தினை ஒருவர் தனது சொந்தச் செலவில் செய்து தந்தார். அவ்வாறே பலரும் ஒவ்வொன்றை பொறுமையோடு செய்கிறார்கள். செய்தும் வருகிறார்கள். இவர்களின் சேவை எம் மையத்திற்கு என்றுமே தேவை...


பலமுறை தாங்கள் கூறினீர்கள். பாரிய நிதிப் பற்றாக்குறை உள்ளது என்று அதை பெற்றுக் கொள்ள ஏதும் நடவடிக்கை மேற்கொண்டிர்களா, பயன் உண்டா..?

பலமுறை பலரிடமும் பல அமைப்புக்கள் நிறுவனங்கள் அரசியல் வாதிகள் அரசியல் திணைக்களங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரிடமும் கேட்டு விட்டுவிட்டோம். கேட்டும் வருகின்றோம். இதுவரை எந்தப் பலனும் இல்லை. சில நல்ல உங்களுக்கு சில அமைப்புக்களும் முன்வந்து உதவி செய்தன செய்தும் வருகின்றன. சமீபத்தில் கைத்தொழில் மீன்பிடி அமைச்சர் ப.டெனிஸ்வரன் அவர்கள் உதவி செய்தார் அதுபோல அரசியல் அமைப்புக்களிடம் வினாவினால் எங்கள் அமைப்புக்களோ நட்டத்தில் உள்ளது என்கிறார்கள். எல்லாவற்றையும் விட  விதமாக மன்னார் மக்கள் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்தவரை உதவி செய்து வருகின்றார்கள். உள்நாடு வெளிநாடு வாழ்கின்ற நல்ல உள்ளங்களின் மனிதத் தன்மையினாலும் இவ்வமைப்பு இயங்கி வருகின்றது. இனிவரும் காலத்தில் இயங்கி இணைந்திருங்கள்.

மாற்றுவலுவுள்ளோருக்கும் ஏனையோருக்கும் தங்களின் கருத்து என்ன?

எல்லாம் நல்ல நிலையில் உள்ள எங்களை விட மாற்றாற்றல் உள்ளோர் மிகவும் வலிமையும் வேகம், விவேகம் கொண்டவர்கள். அவர்களின் ஆற்றல்களை வெளிக் கொணர்ந்து அவர்களுக்கான வாழ்க்கை பாதையினை பிரகாசமூட்டுவோம். எனது அனுபவம் இவர்களுக்கு இப்பயிற்சிகளை வழங்குகின்றோமே. இவர்கள் ஒழுங்காக செய்வார்களா என்ற கேள்வி எனக்குள் இருந்தது. இப்போது இவர்களின் செயற்பாட்டில் என்னிட் எந்த விதமான சந்தேகமும் இல்லை. சந்தோசமாகவுள்ளது. அவர்களின் வேகமும் போட்டி போட்டு செய்கின்ற துடிப்பும் ஒரு கிழமைக்கு 1000 மெழுகுதிரிகளை தயாராக்குகின்றார்கள். பாருங்களேன். இன்னும் பல பயிற்சிகளை (கோடியல், பனை உற்பத்தி பொருட்களைக் கொடுத்தால் இன்னும் அவர்களின் வாழ்வு பிரகாசமாக அமையும். எல்லாம் பணத்தில் தான் அடங்கியுள்ளது. மனம் வைத்தால் முடியாது என்று எதுவுமே இல்லை வானமா எல்லை…


தங்களின் கொடைகள் அன்பளிப்புக்களுக்கு அழையுங்கள்

MARDAP 
T.P : 023-2250709
Mobil : 071-5221087
Fax : 023-2250709
Email : jmaryhf@gmail.com


செவ்வி வழங்கியவர்: MARDAP – நிர்வாக உத்தியோகத்தர், திருமதி.ஜெசி அரியரெட்ணம்.

செவ்வி கண்டவர் : வை.கஜேந்திரன்.









































அளப்பரிய சேவை செய்யும் (MARDAP) – Mannar Association For Rehabilition of Differently Able People. இன் சேவைகள் பற்றிய தகவல்கள் Reviewed by NEWMANNAR on November 30, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.