அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் உதயம் 'மன்னாரின் கல்விக்குரல்' -முன்பள்ளி மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களும் வழங்கி வைப்பு.-Photos

'ஏற்றத்தாழ்வு இல்லா அனைவருக்கும் கல்விக் குரல் கொடுப்போம்' எனும் கருப்பொருளில் மன்னார் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட 'மன்னாரின் கல்விக்குரல்' எனும் அமைப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை(30) மாலை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை வைபவ ரீதியாக அதன் செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்தார்.

ஆரம்ப நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் மன்னாரின் கல்விக் குரல் அமைப்பின் இயக்குனரும், சூரியன் எப்.எம்.வானொலியின் உதவி நிகழ்ச்சி முகாமையாளருமான சின்னப்பு நாயகம் டிலான் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம் பெற்றது.

இதன் போது பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை,சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல், கௌரவ விருந்தினர்களாக வை.எம்.சி.ஏ.அமைப்பின் தலைவர் யூட் பிகிராடோ, மடு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஒஸ்மன்ட் ரெனி,அனார்த்த முகாமைத்துவ வைத்திய அதிகாரி கே.அரவிந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்,முன்பள்ளிக்கு தேவையாக கற்றல் உபகரணங்கள் ஆகியவை வழங்கி வைத்தனர்.இதன் போது முன்பள்ளி மாணவர்களது கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது.

இது வரை இந்த முன்பள்ளி சிறார்களுக்கு எந்த உதவிகளும் எவரினாலும் வழங்கப்படாத நிலையில் 'மன்னாரின் கல்விக் குரல்' அமைப்பினால்; உதவிகள் வழங்கப்பட்டமை குறித்து பெற்றோரும்,முன்பள்ளி ஆசிரியர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.



































மன்னாரில் உதயம் 'மன்னாரின் கல்விக்குரல்' -முன்பள்ளி மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களும் வழங்கி வைப்பு.-Photos Reviewed by NEWMANNAR on December 01, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.