அண்மைய செய்திகள்

recent
-

பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுகாணும் சர்வதேச ரீதியிலான 16 நாள் பிரச்சார நடவடிக்கைகள்(25-11 தொடக்கம்10-12-வரை)


நவம்பர் 25 தொடக்கம் டிசம்பர் 10 வரையான காலப்பகுதியில் உலகெங்கும் அனுஷ்டிக்கப்பட்டுவரும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயல்வாத பிரச்சாரத்தினை ஒவ்வாரு வருடமும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

அதாவது டோமினிக்கன் குடியரசில் அரசியலில் ஈடுபட்ட மூன்று சகோதரிகளை படுகொலை செய்ததை நினைவு கூரும் வகையில் இந்நிகழ்வானது அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

1991 ஆண்டு பெண்களுக்கெதிரான அனைத்து வன்முறைகளையும் இல்லாதொழிப்பதற்கான பிரச்சார நடவடிக்கையினை கார்த்திகை 25 தொடக்கம் மார்கழி 10- சர்வதேச மனித உரிமைகள் தினம் வரை, ஈடுபடுமாறு உலகப் பிரகடனம் கொண்டு வரப்பட்டது.

1991ம் ஆண்டு முதலாவது பிரச்சார நடவடிக்கையில் சுமார் 1700 நிறுவனங்களும்,130 நாடுகளும் பங்குபற்றின. அன்றைய வருடத்திலிருந்து உலகெங்கும் இந்நிகழ்வினை அனுஷ்டித்து வருகின்றனர்.

இவ்வருட கருப்பொருள் ' வீட்டிலிருந்து உலகிற்கு சமாதானம்'
மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியமும் ஒவ்வொரு வருடமும் இப் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.

மன்னார் மாவட்டம் உட்பட இலங்கையில் பெண்கள் மீதான வன்முறைகளானவை மக்களின் வாழ்க்கையையும், சமூகஅபிவிருத்தியையும் பாதிக்கும் ஒருபாரிய பிரச்சனையாக இருந்து வருகின்றது.எனவே இப் பிரச்சனை அனைத்து மட்டங்களிலுள்ளோரின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் மன்னார் மாவட்டத்தில் இவ் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆகவே பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சார நடவடிக்கைகளில் ஆண், பெண், இளைஞர்கள் யுவதிகள் ஆகியோர் பங்குபற்றி இதுசம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் ஒரு ஒளிமயமான ஆரோக்கியமான வன்முறையற்ற சமூகத்தை உருவாக்குவோம் வகையில் தொடர்ந்தும் குரல் கொடுப்போம்.
பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுகாணும் சர்வதேச ரீதியிலான 16 நாள் பிரச்சார நடவடிக்கைகள்(25-11 தொடக்கம்10-12-வரை) Reviewed by NEWMANNAR on November 28, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.