அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற பிரதேச இலக்கிய விழா-Photos

மன்னார் பிரதேச கலாசாரப் பேரவை ஏற்பாடு செய்திருந்த மன்னார் பிரதேச இலக்கிய விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (30) காலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.

காலை 10 மணியளவில் மன்னார் பஸார் பகுதியில் உள்ள தந்தை செல்வா நினைவுச்சிலைக்கு முன்பாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு மங்கள வாத்திய இசையுடன் மன்னார் நகர சபை மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

மன்னார் நகர சபை மண்டபத்தின் விமலன் ஆசிரியர் அரங்கில் மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்த குமார் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமானது.

குறித்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடமாகாண அமைச்சர் பா..டெனிஸ்வரன்,சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மற்றும் விசேட விருந்தினர்களாக மன்னார் பிரதேச் சபையின் தலைவர் மாட்டீன் டயஸ்,மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார்,தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு அதிகாரி மேஜர் ஜெனரல் கே.எம்.யு.விஜயரத்ன,மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொட்ரிகோ,மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர்,நானாட்டான் பிரதேசச் செயலாளர் பரமதாஸ் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கலாச்சார நிகழ்வுகள்,நடனம்,சிறப்பு விவாதங்கள் ஆகியவை இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
























மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற பிரதேச இலக்கிய விழா-Photos Reviewed by NEWMANNAR on November 30, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.