அண்மைய செய்திகள்

recent
-

சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகளுக்கு தடை


டிசம்பர் மாதம் 3ஆம் திகதி நள்ளிரவில் இருந்து கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடையும் வரை அது தொடர்பான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பதாதைகள், சுவரொட்டிகளை காட்சிப்படுத்தல், மாதிரி வினாத்தாள்களை அச்சிடல் மற்றும் விநியோகித்தல், அவற்றைக் கொண்டுசெல்லல் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார குறிப்பிடுகின்றார்.

இம்முறை சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 9ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகளுக்கு தடை Reviewed by NEWMANNAR on November 27, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.