அண்மைய செய்திகள்

recent
-

2015 ஆம் ஆண்டு கல்வியாண்டுக்கான பாடசாலை தவணை வெளியீடு

2015ஆம் ஆண்டு கல்வியாண்டுக்கான பாடசாலை தவணை அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழ் சிங்கள பாடசாலைகள் முதலாம் தவணைக்காக ஜனவரி 5ஆம் திகதி முதல் ஏப்ரல் 8ஆம் திகதி வரை இயங்கும்.

இரண்டாம் தவணைக்காக ஏப்ரல் 21ஆம் திகதி முதல் ஜுலை 30ஆம் திகதி வரையும் ,மூன்றாம் தவணைக்காக ஆகஸ்ட் 31ஆம் திகதி முதல் டிசம்பர் 4ஆம் திகதி வரை தமிழ் சிங்கள பாடசாலைகள் இயங்கும்

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகள் 2015ஆம் ஆண்டு கல்வியாண்டின் முதலாம் தவணைக்காக ஜனவரி 5ஆம் திகதி முதல் ஏப்ரல் 10ஆம் கதி வரை இயங்கும். இரண்டாம் தவணைக்காக இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 20ஆம் திகதி முதல் ஜுன் 18ஆம் திகதி வரையும், ஜுலை 21ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 26ஆம் திகதி வரையும் இயங்கும்.

அவ்வாறே, மூன்றாம் தவணைக்காக ஆகஸ்ட் 31ஆம் திகதி முதல் டிசம்பர் 4ஆம் திகதி வரை முஸ்லிம் பாடசாலைகள் இயங்கும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவிக்கின்றது.
2015 ஆம் ஆண்டு கல்வியாண்டுக்கான பாடசாலை தவணை வெளியீடு Reviewed by NEWMANNAR on November 30, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.