மன்னாரில் புதிய தையல் பயிற்சி நிலையங்கள் ஆரம்பித்து வைப்பு.-Photos
கைத்தொழில் வர்த்தக வாணிப அமைச்சும்,சிலிட்டா நிறுவனமும் இணைந்து மன்னார் நகரில் 4 தையல் பயிற்சி நிலையங்களை இன்று(27) வியாழக்கிழமை காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளது.
உப்புக்குளம் வடக்கு,உப்புக்குளம் தெற்கு,பள்ளிமுனை,மூர்வீதி ஆகிய 4 கிராமங்களிலும் குறித்த தையல் பயிற்சி நிலையங்களை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த தையல் பயிற்சி நிலையங்களை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதீயுதீன் வைபவ ரீதியாத திறந்து வைத்தார்.
இதன் போது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர்,கைத்தொழில் வர்த்தக வாணிப அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் எம்.முஜாகீர் உற்பட பிரமுகர்கள் கலந்து கொண்டு குறித்த பயிற்சி நிலையத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்து பயிற்சியை ஆரம்பித்து வைத்தனர்.
ஒரு பயிற்சி நிலையத்தில் 20 தையல் பயிற்சியாளர்கள் அனுமதிக்கப்பட்டு 6 மாத கால பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. பயிற்சி முடிவில் பயிற்சியாளர்களுக்கு சுய தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட புதிய தையல் இயந்திரம் மற்றும் உபகரணங்கள் என்பன வழங்கப்படவுள்ளது.
கைத்தொழில் வர்த்தக வாணிப அமைச்சும்,சிலிட்டா நிறுவனமும் இணைந்து மேற்கொண்டு வந்த தொழிற் பயிற்சிகள் கொழும்பில் மாத்திரம் இடம் பெற்று வந்த நிலையில் அமைச்சர் றிஸாத் பதியுதீனின் முயற்சியினால் குறித்த பயிற்சி நிலையங்கள் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் புதிய தையல் பயிற்சி நிலையங்கள் ஆரம்பித்து வைப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
November 28, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 28, 2014
Rating:







No comments:
Post a Comment