அண்மைய செய்திகள்

recent
-

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்கள் மற்றும் காலணிகள் பறிமுதல்

டுபாயிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சந்தேகத்திற்கிடமான நான்கு பெட்டிகளில் இருந்து சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான சிகரெட்டுகள் மற்றும் காலணிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

பயணிகளுடைய பொருட்கள் எனக் குறிப்பிடப்பட்டு இந்த நான்கு பெட்டிகளும் டுபாயில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாக சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி குறிப்பிட்டுள்ளார்.

கிண்ணியா, அரநாயக்க மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளுக்கான போலி முகவரிகளுக்கு இந்த பெட்டிகள் அனுப்பிவைக்கப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவற்றை இன்று திறந்தபோது மூன்று இலட்சத்து 47 ஆயிரத்து 200 சிகரெட்டுகளும், 832 சோடி ஆடவருக்கான காலணிகளும், இரண்டாயிரத்து 80 சோடி சிறுவர்களுக்கான காலணிகளும் இருந்ததாக லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் அரசாங்கம் சுமார் இரண்டு கோடி ரூபா வரியை இழக்க நேரிட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

அத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட காலணிகளின் பெறுமதி 18 இலட்சம் ரூபாவென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்கள் மற்றும் காலணிகள் பறிமுதல் Reviewed by NEWMANNAR on November 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.