பீ.திகாம்பரம், செந்தில் தொண்டமான் ஆகியோரை நீதிமன்றில் அஜராகுமாறு அழைப்பாணை
கடந்த வருடம் கினிகத்தேனையில் இரண்டு அரசியல் கட்சி ஆதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு தொடர்பில் பிரதி அமைச்சர் பீ.திகாம்பரம் மற்றும் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் ஹட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இன்றைய வழக்கு விசாரணையின்போது ஆஜரான மத்திய மாகாண அமைச்சர் ராம் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் உதயகுமார் ஆகியோரை தலா 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், 50,000 வீதம் சரீரப் பிணையிலும் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன் பிரதி பீ.திகாம்பரம் மற்றும் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
இந்த வழக்கு டிசம்பர் மாதம் 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கடந்த வருடம் மத்திய மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்ற காலப்பகுதியில் கொட்டகலை பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டிருந்தது.
இதன்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டிருந்ததாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பீ.திகாம்பரம், செந்தில் தொண்டமான் ஆகியோரை நீதிமன்றில் அஜராகுமாறு அழைப்பாணை
Reviewed by NEWMANNAR
on
November 18, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 18, 2014
Rating:


No comments:
Post a Comment