அண்மைய செய்திகள்

recent
-

முகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளுக்கு மன்னார் பொது வைத்தியசாலையில் விசேட சத்திர சிகிச்சைகள் - Photos


சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விசேட சத்திர சிகிச்சைகள் இடம் பெற்று வருகின்றது.

உதட்டு பிளவுகள்,அண்ணப்பிளவு மற்றும் முகத்தில் ஏற்படும் குறைபாடுகள் ஆகியவற்றிற்கான சத்திர சிகிச்சைகளே  மன்னார் பொது வைத்தியசாலையில் இடம் பெற்று வருகின்றது.

மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ரூபன் லெம்பேட் மற்றும் மன்னார் பிராந்திய பல் வைத்திய அதிகாரி சிறிதேவி வேதவனம் ஆகியோர் சுகாதார அமைச்சிற்கு முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாக குறித்த சத்திர சிகிச்சைகள் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 28 ஆம் திகதி முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை 30 ஆம் திகதி வரை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம் பெற்று வருகின்றது.

மன்னார் மாவட்டத்தில் குறித்த குறைபாடுகளுடன் காணப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையிலே குறித்த சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த குறைபாடுகளுடன் காணப்பட்ட 80 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களுக்கு முதற்கட்டமாக குறித்த சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குருநாகல் போதனா வைத்திய சாலை மற்றும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைகளைச் சேர்ந்த சுமார் 30 பேர் அடங்கிய வைத்திய குழுவினர் குறித்த சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் குறித்த குறைபாடுகளுடன் உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கும் குறித்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கைகள் மேற்றகொள்ளப்படும் என மன்னார் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ரூபன் லெம்பேட் தெரிவித்தார்.






முகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளுக்கு மன்னார் பொது வைத்தியசாலையில் விசேட சத்திர சிகிச்சைகள் - Photos Reviewed by NEWMANNAR on November 30, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.