கிரிக்கெட்டில் அடுத்த உயிரிழப்பு
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த நடுவர் ஹிலேல் அவாஸ்கர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பந்தால் தாக்கப்பட்டு மரணமாகியுள்ளார்.
துடுப்பாட்ட வீரர் ஒருவர் அடித்த பந்து, விக்கெட்டில் பட்டு நடுவரை தாக்கியுள்ளது. இதன் காரணமாக 55 வயதான அவாஸ்கருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் உயிரிழந்துள்ளார்.
இவர் இஸ்ரேல் அணியின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் போட்டிகளில் கூடுதலான ஓடங்களை அடித்தவர் என்ற சாதனையும் இவர் வசம் உள்ளது. ஆட்டமிழக்காமல் 244 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் ஐந்து தொடர்களில் 1982 ஆம் ஆண்டு முதல் பங்கு பற்றி ஓரளவு சிறந்த பெறுதிகளையும் அணிக்கு பெற்றுக் கொடுத்து இருந்தார்.
ஆஸ்திரேலியா வீரர் பிலிப் கியூஸ் பந்து தாக்கி உயிரிழந்து ஒரு வாரத்திற்குள் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளமை கிரிக்கெட் வாட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பிறந்து, இஸ்ரேலில் குடியேறியவர் ஹிலேல் அவாஸ்கர்.
கிரிக்கெட்டில் அடுத்த உயிரிழப்பு
Reviewed by NEWMANNAR
on
November 30, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 30, 2014
Rating:
.jpg)

No comments:
Post a Comment