வடமாகாண பாடசாலை அதிபர்களுக்கு 01.01.2015இல் இடமாற்றம்.
வடமாகாணத்தில் உள்ள ஒரே பாடசாலையில் தொடர்ச்சியாக எழு ஆண்டுகள் கடமையாற்றிய அதிபர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சு செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் கடமைநிறைவேற்று அதிபராகவோ அன்றி நிரந்தர நியமனம் பெற்ற அதிபராகவோ எழு வருடங்கள் தொடரச்சியாகக் கடமையாற்றியவர்களுக்கு இந்த இடமாற்றங்கள் வழங்கப்படவுள்ளன. மேற்படி கூட்டத்தில் 55 வயதிற்கு மேற்பட்ட வயதினையுடைய அதிபர்களுக்கு இடமாற்றம் வழங்கக்கூடாது எனவும் அதனால் பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படும் என்னும் கோரிக்கையை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முன்வைத்து கஸ்டமான காலங்களில் கடமை நிறைவேற்று அதிபர்களாகக் கடமைபுரிந்தவர்களின் சேவை மதிக்கப்படவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தது.
அதனை ஏற்றுக் கொண்ட செயலாளர் இடமாற்றத்திற்கான வயதெல்லையை 55ஆக நிர்ணயித்துஇ கடமைநிறைவேற்று அதிபர்களின் இடமாற்றங்களில் நெகிழ்ச்சிப் போக்கினைக் கடைப்பிடிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
இதைவிட புதிய அதிபர் சேவைப் பிரமாணக்குறிப்பின் அடிப்படையில் பதவியுயர்வு பெறுகின்ற அதிபர்களுக்கு பொருத்தமான பாடசாலைகள் வழங்கப்படவேண்டும் என சங்கம் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட செயலாளர் அவை உரிய முறைப்படி வழங்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
வடமாகாண பாடசாலை அதிபர்களுக்கு 01.01.2015இல் இடமாற்றம்.
Reviewed by NEWMANNAR
on
November 08, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 08, 2014
Rating:

No comments:
Post a Comment