மன்னார் முன்பள்ளி உதவி கல்வி பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வுபெறும் திரு.எல்.ஆர்.மேவின் குரூஸ் அவர்களின் சேவைநலன் பாராட்டு விழா - Photo
மன்னார் மாவட்ட முன்பள்ளி உதவி கல்வி பணிப்பாளராக(ஆரம்ப பிள்ளைப்பருவ அபிவிருத்தி) கடமையாற்றி ஓய்வுபெறும் திரு.எல்.ஆர்.மேவின் குரூஸ் அவர்களின் சேவைநலன் பாராட்டு விழா 08.11.2014 சனிக்கிழமை அன்று மன்னார் வலயக் கல்விப் பணிமனையில் முன்பள்ளி ஆசிரியர்களினால் ஒழுங்குபடுத்தப்பட்டு மன்னார் வலயக் கல்வி பணிப்பாளர்தலமையில் இடம்பெற்றது.
இதற்கு எமது முன்பள்ளி ஆசிரியர்களினால் பயிற்றுவிக்கப்பட்ட 04 வயது சிறுமிகளின் வரவேற்பு நடனமும் இடம்பெற்றது. திரு.லூயிஸ் றொசாறியோ குரூஸ் (மேவின்) அவர்களுக்கு எமது முன்பள்ளி சமூகம் சார்பில் நன்றிகளையும், பாராட்டுக்களையும் கூறிக்கொள்வதோடு. இனிவரும் காலங்களும் சிறப்பானதாக அமையவும் வாழ்த்துகின்றோம்.
குறிப்பாக இம்முன்பள்ளி இயங்குவதற்கு வசதிகளற்ற நிலையிலும் இந்நடனம் செயற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முன்பள்ளி முகாமைத்துவ குழு,
பூண்டி மாதா முன்பள்ளி,
எமில்நகர், மன்னார்.
மன்னார் முன்பள்ளி உதவி கல்வி பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வுபெறும் திரு.எல்.ஆர்.மேவின் குரூஸ் அவர்களின் சேவைநலன் பாராட்டு விழா - Photo
Reviewed by NEWMANNAR
on
November 08, 2014
Rating:

No comments:
Post a Comment