அண்மைய செய்திகள்

recent
-

இரு கால்களையும் இழந்த போராளிக்கு வழங்கிய உதவி தொடர்பில் இராணுவம் துருவித்துருவி விசாரணை: வைத்திய கலாநிதி சிவமோகன் சீற்றம்

இரண்டு கால்­க­ளையும் இழந்த முன்னாள் போராளி ஒரு­வ­­ருக்கு தாம் வழங்­கி­ய உ­த­விகள் தொடர்பில் அவ­ரிடம் இரா­ணுவப் புல­னாய்­வா­ளர்கள் தீவி­ர­மான விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளனர் என வட­மா­கா­ண­சபை உறுப்­பினர் வைத்­தி­ய­க­லா­நிதி சிவ­மோகன் தெரி­வித்தார்.

இவ்­வி­டயம் தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்,

இரண்டு கால்­க­ளையும் இழந்த நிலையில் முல்­லைத்­தீவில் வசித்­து­வ­ரு­கின்ற ஆர்.புஸ்­ப­றஜீவன் என்ற முன்னாள் போரா­ளிக்கு ஒரு வரு­டத்­துக்குத் தேவை­யான அரி­சியை வழங்­கி­யி­ருந்தோம்.

இவ்­வாறு வறிய நிலையில் வாழ்ந்­து­வ­ரு­கின்ற பல குடும்­பங்­க­ளுக்கு முத­ல­மைச்சர் நிதி­யத்தின் ஊடாக உத­வி­களை வழங்­கு­வ­தற்கு திட்­ட­மிட்­டி­ருந்தோம் ஆனால் அத்­திட்­டத்­தையும் தடுத்து வரு­கின்­றனர்.

இவ்­வாறு பாதிக்­கப்­பட்ட வலு­வி­ழந்த நிலையில் வசிக்­கின்­ற­வர்­க­ளுக்கு சர்­வ­தேச தொண்டு நிறு­வ­னங்கள் இங்­கி­ருந்த காலப்­ப­கு­தியில் பல்­வேறு உத­வி­களை வழங்­கி­யி­ருந்­தன. அத­னையும் அர­சாங்கம் தடுத்­துள்­ளது.

இந்த நிலையில் புலம்­பெயர் உற­வு­களின் உத­வி­யுடன் எமது உற­வு­க­ளுக்கு வழங்­கு­கின்ற உத­வி­க­ளையும் தடுத்து வரு­கின்­றனர்.

இரு­கால்­க­ளையும் இழந்­த­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள உதவி தொடர்பில் விசாரித்துள்ளனர். இதனால் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு நம்பிக்கை ஒளியேற்ற முடியும் என்ற கேள்வியும் எழுகின்றது என்றார்.
இரு கால்களையும் இழந்த போராளிக்கு வழங்கிய உதவி தொடர்பில் இராணுவம் துருவித்துருவி விசாரணை: வைத்திய கலாநிதி சிவமோகன் சீற்றம் Reviewed by NEWMANNAR on November 26, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.